சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அவற்றில் 5 தொகுதிகளில் அன்புமணி தரப்பு பாமக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சட்டசபை தேர்தலில் சசிகலா கட்சியடன் ராமதாசின் பாமக கூட்டணி அமைத்துள்ளது. நேற்று முதற்கட்டமாக ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ராமதாஸ் அறிவித்து இருந்தார் இந்நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதன்படி,
திருப்போரூர் – ஏகாம்பரம்
உத்திரமேரூர் – ஸ்ரீதர்
கும்மிடிப்பூண்டி- சங்கர்
திருவள்ளூர் – வெங்கடேசன்
செஞ்சி – கனல்பெருமாள்
தர்மபுரி – சரவணன்
ஜெயங்கொண்டம் – காடுவெட்டி ரவி ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
அதில், அன்புமணி மனைவி சவுமியா போட்டியிடும் தர்மபுரி மற்றும் செஞ்சி, உத்திரமேரூர், திருப்போரூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் அன்புமணி தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
