தமிழக சட்டப்பேரவையில் அரங்கேறிய பரபரப்பு சம்பவங்கள்.. திரும்பிப் பார்க்க வைத்த முக்கிய நிகழ்வுகள் – tvk government first legislative assembly session key events that drew attention

தவெக அரசு அமைத்து 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையின் கீழ் உள்ள அமைச்சரவை கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியா ஒளிபரப்பு செய்யறது பல தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுருக்கு. இந்த நிலையில அங்க நடக்குற வாதங்களும் கேள்வி பதில்களும் பேச்சுக்களும் எதிர்பேச்சுக்களும் நிறையவே கவனிக்கப்பகிறது. அப்படி சில சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளை பார்க்கலாம்.
சின்னப்பிள்ளை பற்றிய அமைச்சர் கீதாஜீவாவின் பேச்சு மற்றும் விளக்கம் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி, மதுரை ‘சின்னப்பிள்ளை’ என்ற மூதாட்டி ஹைட்ராலிக் சிஸ்டத்தில் ஆயில் லீக் ஆகாமல் இருக்க ‘ஓ-ரிங்’ (O-ring) கண்டுபிடித்ததாகவும், அப்போதைய பிரதமர் வஜ்பாய் அவர் வீட்டிற்கே சென்று காலில் விழுந்ததாகவும் அமைச்சர் கீர்த்தனா சட்டமன்றத்தில் பேசினார். இது சமூக வலைதளங்களில் விவாதமான நிலையில், ஆகஸ்ட் 27-ஆம் தேதி அவையில் விளக்கம் அளித்த அமைச்சர், சின்னப்பிள்ளை மதுரை ‘தான் ஃபவுண்டேஷன்’ (DHAN Foundation) சுயஉதவிக் குழுவின் தீவிர உறுப்பினர் என்றும், பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த சிறப்பாக பணியாற்றியவர் என்றும் குறிப்பிட்டார். அவரது சேவையை பாராட்டி 2019-இல் பத்மஸ்ரீ விருதும், 2001-இல் ‘ஸ்த்ரீ சக்தி புரஸ்கார்’ விருதும் வழங்கப்பட்டது. அந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வஜ்பாய் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும், மதுரையில் இயங்கும் ஹை-டெக் அராய் (Hi-Tech Arai) நிறுவனத்திற்கு சுயஉதவிக் குழுக்கள் மூலம் ‘ஓ-ரிங்’ தயாரித்து தரும் பணிக்கு அவர் உறுதுணையாக இருந்தார் என்றும், இதன் மூலம் 200 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கருத்து வாபஸ்

ஆகஸ்ட் 27-ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கைவிவாதத்தின் போது, ஆதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆணித்தரமாக ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

ஆனால், மறுநாள் முன்னாள் அமைச்சர் எம்பிகே பண்ணீர்செல்வம் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, தான் கூறிய தவறை ஒப்புக்கொண்டு சி.வி. சண்முகம் தனது பேச்சை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

மஞ்சள் துண்டு விவாதம்

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்தது குறித்து ஆகஸ்ட் 19-ஆம் தேதி அமைச்சர் நிர்மல்குமார் பேசினார்.

இதற்கு பதிலளித்த பாமக உறுப்பினர், 108 சமுதாயத்திற்கு சேர்த்து இடஒதுக்கீடு அளித்ததற்காக சமூகநீதியை அங்கீகரித்து, விழுப்புரத்தில் மாநாடு கூட்டி பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்கள் கலைஞர் அவர்களின் கழுத்தில் போட்டதே அந்த மஞ்சள் துண்டு என வரலாற்று பின்னணியை விளக்கினார்.

சட்டமன்ற இருக்கை குறித்து தாரகை கத்பாட் விளக்கம்

ஆகஸ்ட் 31-ஆம் தேதி, காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பாட் எதிர்க்கட்சி வரிசையில் பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணியின் பக்கத்தில் அமர்ந்திருந்தது கேள்விகளை எழுப்பியது.

இதற்கு விளக்கமளித்த தாரகை கத்பாட், தான் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் தமக்கு அந்த இருக்கை ஒதுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

காமராசர் மறைவு – மெரினாவில் இடம் விவகாரம்

பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவருக்கு மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அன்றைய முதல்வர் மு.கருணாநிதி இடம் தரவில்லை என தாரகை கத்பாட் குறிப்பிட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, காமராசர் மறைந்த செய்தி அறிந்தவுடன் கலைஞர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதையும், காங்கிரஸ் தலைவர்களின் விருப்பப்படி ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, கிண்டியில் காந்தி மண்டபம் அருகில் அரசு மரியாதையுடன் நினைவாலயம் அமைத்துத் தந்த வரலாற்றையும் விளக்கினார். இதையேற்றுக்கொண்ட தாரகை கத்பாட், தான் கூறிய கருத்திற்கு தெளிவுரை வழங்கி விவாதத்தை முடித்து வைத்தார். காப்பீட்டுத் திட்டம் குறித்த விவாதம்தவெக எம்.எல்.ஏ டாக்டர் அருண்குமார் பேசுகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிதி வரம்பு ₹5 லட்சத்தில் இருந்து ₹25 லட்சமாக உயர்த்தப்பட்டதால், ஒரு குழந்தைக்கு ₹9.5 லட்சம் அனுமதிக்கப்பட்டு வெற்றிகரமாக எலும்பு மஜை மாற்று சிகிச்சை (Bone Marrow Transplant) செய்யப்பட்டதாகப் பாராட்டினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது ₹5 லட்சத்திற்கான காப்பீட்டு டெண்டர் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதாகவும், வரும் ஜனவரியில் புதிய டெண்டர் வரும் போது காப்பீட்டுத் தொகை அதிகாரப்பூர்வமாக ₹25 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் கூறினார்.

சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்த பெண் உறுப்பினர்கள்

செப்டம்பர் 2-ஆம் தேதி, மாற்றுப் பேரவைத் தலைவராக தவாக எம்.எல்.ஏ சத்யபாமா சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து அவையை வழிநடத்தினார். இவர் தான் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் உறுப்பினர் என செய்திகள் பரவின. ஆனால், இந்திய சுதந்திரத்திற்கு முன்பே 1937-இல் ருக்மணி லட்சுமிபதி துணைப் பேரவைத் தலைவராக அவையை நடத்தியுள்ளார். மேலும், ஏ.எஸ். பொன்னம்மாள் (1991, 1996), லீமா ரோஸ், யசோதா ஆகியோரும் மாற்றுப் பேரவைத் தலைவர்களாக அவையை வழிநடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், மாற்றுப் பேரவைத் தலைவர் பட்டியலில் இருந்த தவாக எம்.எல்.ஏ மதார் பதுருதீன் முஸ்தபா அவையை நடத்திய போது, அவரில் அமர்ந்த முதல் இஸ்லாமியர் என பரவிய செய்தியும் தவறானது. 2001-இல் அப்துல் லத்தீப் தற்காலிக சபாநாயகராக பணியாற்றியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து வாபஸ்
செப்டம்பர் 2-ஆம் தேதி, 110-வது விதியின் கீழ் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிடவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

சபாநாயகர் மற்றும் அவைத் தலைவர் ஆதாரங்களைச் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, தனது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவரது பெருந்தன்மையை அவைத் தலைவர் பாராட்டினார் போன்ற நிகழ்வுகள் பேசுபொருளாகி உள்ளது.

Source link