சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் மானிய கோரிக்கை மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக தவெக அரசினை நோக்கி கடுமையான கேள்விகளை எழுப்பினார். இதனையடுத்து முதல்வர் பேசிய சில வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு ஓபிஎஸ் கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் சபாநாயகர் அதனை நிராகரித்தார். இந்நிலையில் அவரின் கோரிக்கையை நிராகரித்தது ஏன் என்பது குறித்து அவைத் தலைவர் ஜே.சி.டி. பிராபகர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் காவல் துறைக்கான மானிய கோரிக்கையின் மீது சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக கடுமையான விமர்சனங்களை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்தார். இதனையடுத்து அவருடைய கேள்விகள் அனைத்திற்கும் வரும் திங்கட்கிழமை அன்று பதில் அளிப்பதாக முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார். அதோடு நான் பதில் அளிக்கும்போது, யாரும் அவையை விட்டு ஓடி விடக்கூடாது என எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வது குறித்து விமர்சனம் செய்தார்.
மேலும் யாரும் அவையை விட்டு ஓடி விடக்கூடாது என சொல்லிவிட்டு, முதல்வர் கிளம்பி சென்றதும் விமர்சனங்களை கிளப்பியது. இதனிடையில் ஓபிஎஸ், யாரும் அவையை விட்டு ஓடக்கூடாது என முதல்வர் ஜோசப் விஜய் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதெல்லாம் நீக்க முடியாது. உட்காருங்க என சொல்லிவிட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
