நடுவானில் விமானத்தில் எச்சரிக்கை ஒலி: லக்னோவில் அவசர தரையிறக்கம்

லக்னோ: மேற்கு வங்கத்தில் இருந்து டில்லிக்கு கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நடுவானில் புகைக்கான எச்சரிக்கை ஒலி வந்ததால் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தின் பக்தோக்ரா நகரில் இருந்து டில்லிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 148 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென புகை எச்சரிக்கை மணி ஒலித்தது. மின்னணு சாதனங்கள் இருக்கும் பகுதியில் புகை வருவதை ஊழியர்கள் கண்டறிந்தனர்.

இதனையடுத்து, விமானி உடனடியாக, MayDaY எனப்படும் அவசரகால எச்சரிக்கை விடத்தார்.லக்னோ விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் அங்கு திரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பயணிகள் மாற்று விமானம் மூலம் டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Source link