திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பெண்களை கவரும் வகையில் பா.ஜ., தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள் ளது. சபரிமலை விவகாரம், எய்ம்ஸ் மருத்துவமனை, வேலை வாய்ப்பு உட்பட பல்வேறு முக்கிய வாக்குறு திகளை வழங்கியுள்ளது.
தமிழகத்துடன் சேர்த்து கேரள சட்டசபைக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் வரும் 9ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜ., இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களை பிடித்த உத்வேகத்துடன் பா.ஜ., இந்த தேர்தலை சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பெண்களை கவரும் வகையிலான தேர்தல் அறிக்கையை பா.ஜ., தயாரித்துள்ளது.
‘மேம்பட்ட கேரளம்’ என்ற இலக்குடன் பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், திருவனந்தபுரத்தில் இந்த தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
அப்போது பா.ஜ., மாநில தலைவர் ராஜிவ் சந்திரசேகர் உட்பட தே.ஜ., கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் உடனிருந்தனர்.
பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மகளிருக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்
மளிகை மற்றும் மருத்து வ செலவுகளுக்காக மாதந்தோறும் 2,500 ரூபாய் மதிப்புள்ள ரீசார்ஜ் கார்டு வழங்கப்படும். ‘பக் ஷய ஆரோக்யா’ என்ற பெயரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர், வறுமை கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு இந்த ரீசார்ஜ் கார்டு வழங்கப்படும்
ஓணம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது, ஏழை குடும்பங்களுக்கு தலா ஒரு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்
சுகாதாரத்தை காக்க எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்
சி.பி.ஐ., விசாரணை நடத்தி, சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரத்தில் உண்மை வெளியே கொண்டு வரப்படும்
தேவஸ்வம் போர்டுகள் மாற்றி அமைக்கப்பட்டு, கோவில் நிர்வாகத்தில் பக்தர்களின் பங்கு அதிகரிக்கப்படும்
கோவில்களில் நடக்கும் ஊழல் ஒழிக்கப்படும்
சபரிம லை பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த ‘சபரிமலை உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம்’ அமல்படுத்தப்படும்
விழிஞ்ஞம் துறைமுகம் மேம்படுத்தப்பட்டு தொழிற்துறை மையமாக உருவாக்கப்படும்
திருவனந்தபுரம் – கண்ணுார் வரை அதிவேக ரயில் பாதை உருவாக்கப்படும்
திருவனந்தபுரம், ஐ.டி., மற்றும் புத்தாக்க தலைநகராக மாற்றப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
