இந்நிலையில், பத்தனம்திட்டாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது, சபரிமலை தங்கம் திருட்டில் சிபிஐ (எம்) தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, ‘சுவர்ணம் கட்டது ஆரப்பா’ (ஐயப்பனின் தங்கத்தைத் திருடியது யார்?) என்ற பிரபல நையாண்டிப் பாடலின் வரியை ராகுல் காந்தி பாடினார்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள ஏகேஜி மையத்தில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சபரிமலை தங்கம் திருடுபோன வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருவதை சுட்டிக்காட்டி, “திருட்டில் தொடர்புடையவர்கள் எப்படி உங்கள் வீட்டுக்குச் சென்றார்கள்?” என ராகுலுக்கு கேள்வி எழுப்பினார். இதுபற்றி அவர் யோசித்துப் பார்த்தால் பதில் கிடைத்துவிடும் என்றும் விஜயன் தெரிவித்தார்.
முன்னதாக, திங்கள்கிழமை பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி சபரிமலை விவகாரம் குறித்து மவுனம் காப்பதாகக் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
