பியுனஸ் ஏர்ஸ்: கத்தாரில் நடந்த ‘பிபா’ உலக கோப்பை கால்பந்தில் (2022), மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் ஆனது. நடப்பு சாம்பியனாக களமிறங்கும் அர்ஜென்டினா அணியில், 38 வயதான மெஸ்ஸி, மீண்டும் பங்கேற்பாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இதுகுறித்து மெஸ்ஸி எதுவும் தெரிவிக்கவில்லை.
அர்ஜென்டினா அணி பயிற்சியாளர் ஸ்கலோனி கூறுகையில்,” உலக கோப்பை தொடரில் பங்கேற்பதை மெஸ்ஸி விரும்புகிறார். இது அவருக்கு கடைசி தொடராக இருக்கும். தவிர, பல முன்னணி வீரர்களும் விளையாடுவர். முடிந்தவரை சிறப்பான அணியை தேர்வு செய்வோம்,” என்றார். இதனால் உலக கோப்பை தொடரில் மெஸ்ஸி பங்கேற்பது உறுதியாகி உள்ளது.
