Weekly Horoscope Benefits,வார ராசிபலன் 7 – 13 செப்டம்பர் 2026: கஜகேசரி மற்றும் மஹாலட்சுமி ராஜயோகங்களால் முன்னேற்றம் பெறும் ராசிகள் – weekly horoscope 7 to 13 september 2026: zodiac signs set to see progress under gajakesari and mahalakshmi rajayoga

செப்டம்பர் இரண்டாம் வாரம் 7 முதல் 13 செப்டம்பர் 2026 வரையிலான இந்த வார காலத்தில் மேஷம், மிதுனம் உள்ளிட்ட ஐந்து ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு தங்களுடைய வேலை, தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண உள்ளனர். குடும்பத்தில் நேர்மறையான மாற்றங்கள், மகிழ்ச்சி என நல்ல விஷயங்கள் நடக்க உள்ளன. எந்தெந்த ராசிகளுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான காலமாக அமையும் என விரிவாக தெரிந்து கொள்வோம்.

செப்டம்பர் 7 முதல் 13, 2026 வரையிலான இந்த வார காலத்தில், நவகிரகங்களின் இளவரசன என அழைக்கப்படும் புதன் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி அங்கு ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். சூரியன் சிம்மத்திலும், சுக்கிரன் துலாம் ராசியிலும் ஆட்சி பெற்று அமர்கின்றனர். இது போன்ற அற்புதமான கிரக நிலைகள் நடக்க உள்ள இந்த வாரத்தில் பல்வேறு யோகங்களும் உருவாக உள்ளன. இதில் நன்மை தரும் என பார்ப்போம்.

இந்த வாரத்தில் நடக்கும் அதிசய கிரக நிலை:

கடக ராசியில் சந்திரன் ஆட்சி பெற்றும், குரு பகவான் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். கஜகேசரி யோகம் உருவாகிறது சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார்.மேலும் சிம்மத்தில் கேது மற்றும் சூரியனுடன் இணைந்து ‘சசி-ஆதித்ய ராஜயோகம். செப்டம்பர் 7ஆம் தேதி புதன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகி அங்கு ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். துலாம் ராசியில் சுக்கிர பகவான் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். பத்ர ராஜயோகம்’ உருவாகிறது. மாளவ்ய யோகம் உருவாகிறது.
இது போன்ற அற்புதமான கிரகநிலை மற்றும் யோகங்கள் காரணமாக 12 ராசிகள் மீது அற்புதமான தாக்கங்கள் ஏற்படும். அதில் சில ராசிகளுக்கு மிகவும் நன்மை சேரக்கூடிய காலமாக இருக்கும்.

மேஷம் அதிர்ஷ்டம் வார ராசிபலன்

மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த வாரத்தில் சந்திரன் பெயர்ச்சி மற்றும் ராசி அதிபதி செவ்வாயுடன் சேர்ந்து சஞ்சரிக்க உள்ள நிலையில் உங்களுக்கு நீண்ட காலமாக நிலவில் உள்ள பணிகளை முடிக்க பார்த்தவுடன் செயல்படுவீர்கள். உங்களுடைய செல்வ செழிப்பு அதிகரிக்க கூடியதாக இருக்கும். வேலை தொடர்பாக மும்முரமாக செயல்படுவீர்கள். மேலும் புதிய வாய்ப்புகள், வழிகளை தேடுவதில் ஆர்வம் காட்டுகிறீர்கள்.

உங்களுடைய இலக்கைகளை அடைவதில் உங்கள் முயற்சி தன்னம்பிக்கையுடன், உங்கள் உடன் பிறந்தவர்களும் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உங்கள் பிள்ளைகள் தொடர்பாக சில நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்ப கிடைக்கலாம்.

ரிஷபம் அதிர்ஷ்ட வார ராசிபலன்

ரிஷப ராசி சேர்ந்த நண்பர்களுக்கு இந்த வாரத்தில் பல்வேறு விதத்தில் நன்மைகளை அடைவீர்கள். நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். எதிர்பாராத தன வரவு உங்களை வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியையும் காண்பீர்கள். உங்கள் உறவுகள் இடையே அன்பு அதிகரிக்கும்.

விருந்தினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி உறவு வலுவடையும். மேலதிகாரிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். வாகனம் வாங்கும் வாய்ப்பை பெறுவீர்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நண்பர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரம் மகிழ்ச்சியானதாக நகரும்.

மிதுனம் அதிர்ஷ்ட வார ராசிபலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த வாரத்தில் ஏற்படும் கிரக மாற்றங்கள் மற்றும் யோகங்கள் காரணமாக நன்மைகள் அதிகமாக பெறுவீர்கள். இந்த வாரம் முழுவதும் சிறப்பான வாய்ப்புகள் எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை முடிக்க முடியும். மேலும் நீங்கள் எதிர்பார்த்த சில நல்ல விஷயங்களும் தேடி வரும். உங்களுக்கு கிடைக்கும் லாபம் மூலம் கடந்த கால இழப்புகளை ஈடு செய்ய முடியும். தொழில் தொடர்பாக லாபத்தை எதிர்பார்க்கலாம்.

நிலுவையில் இருந்த ஒப்பந்தங்கள் கைக்கு வரும். காதல் தொடர்பாக மகிழ்ச்சியான சூழல் நிலவும். திருமண வாழ்க்கையில் இருப்பவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி காரணமாக நிம்மதியாக உணர்வீர்கள். உங்களுடைய வருமானத்தில் திடீர் உயர்வு ஏற்படும். புதிய சொத்து வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

துலாம் அதிர்ஷ்ட வார ராசிபலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த வாரத்தில் பல விதத்தில் சிறப்பானதாக அமையலாம். குறிப்பாக உங்கள் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெற்று வந்திருப்பதால், உங்களுடைய லாபம் மற்றும் நிதிநிலை தொடர்பான முன்னேற்றம் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் ஆட்சியைப் பெற்ற சூரியன் காரணமாக உங்களுடைய செயல்பாடுகளில் ஆளுமை திறன் மற்றும் ஆற்றல் அதிகரிக்கும். இதன் மூலம் உங்களுக்கு லாபமும் அதிர்ஷ்டமும் அதிகரிக்கும். இந்த வாரம் முழுவதும் நீங்கள் உற்சாகமாக உடன் செயல்படுவீர்கள். தொழில் செய்யக்கூடிய அன்பர்களுக்கு நல்ல காலமாக அமையும். பயனளிக்கக்கூடிய புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். உங்களுடைய வாழ்க்கையில் நம்பிக்கைக்கு கீற்று தோன்றும்.
பல விதத்தில் உங்களுக்கு சாதகமான சூழலும், வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உங்களுடைய பேச்சில் கவனம் தேவை. சிலருக்கு புதிய காதல் அல்லது உறவு மலரும்.

மீனம் அதிர்ஷ்ட வார ராசிபலன்

மீன ராசி அன்பர்களுக்கு இந்த வாரத்தில் உருவாகும் பல்வேறு யோகங்கள் சாதகமான பலன்களை தரக்கூடியதாக இருக்கும். மிகவும் மங்களகரமான கிரக சூழல் காரணமாக, உடைய குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிட வாய்ப்புகள் உண்டு. பொருள் சார்ந்த வசதிகள் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம், உங்கள் பிள்ளைகள் மூலம் சில நல்ல விஷயங்கள் நடப்பது என அற்புதமானதாக இருக்கும். தொழில் தொடர்பாக வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். நீண்ட தூரம் பயணங்கள் மேற்கொள்ளவும், அதன் மூலம் அனுகூல பலன்களை அடைவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.

Source link