பார்ட்டி ஃபண்ட் புகார்: கே.என்.நேரு வீடுகளில் ரெய்டு.. திமுகவினருக்கு அன்பில் மகேஷ் சொன்ன ஒரு வார்த்தை – anbil mahesh reaction at kn nehru house party fund scam raid

திமுக முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான சுமார் 19 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் என்று அதிகாலை முதலே தேவர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக சென்னையில் அடையாறு, திருவான்மியூர் ,அண்ணா நகர்,ஆர். ஏ.புரம் உள்ளிட்ட பகுதிகளிலும், திருச்சியில் கே என் நேருவுக்கு சொந்தமான 19 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கி உள்ளன.

கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

ஏற்கனவே இவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே நகராட்சி நிர்வாக துறை ஒப்பந்தங்களில் கட்சி நிதி அதாவது பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பெயரிலேயே இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேருவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடப்பது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.திருச்சியில் உள்ளகே.என்.நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைநடத்தி வரும் தகவலறிந்து, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்படப் பல முன்னணி திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரது வீட்டின் முன் குவிந்து வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

பார்ட்டி ஃபண்ட் முறைகேடு

அப்போது கே.என். நேருவின் வீட்டிற்கு வெளியே, நின்றுக்கொண்டிருந்த திமுகதொண்டர்களிடம், அமைதியாக இருங்க.. ஒன்னும் ஆகாது.. என்று அன்பில் மகேஷ் கூறினார். இதற்கிடையே, சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதல்வர் விஜய் , கடந்த ஆட்சியில் பல்வேறு அரசுத் துறைகள் மூலம் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் முறைகேடான வகையில் சுருட்டப்பட்டதாக குற்றம்சாட்டினார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வர் விஜய் ஊழல் செய்ய மாட்டேன்.. செய்தவர்களை விடமாட்டேன்.. தொடவிடமாட்டேன் என்று கூறியது. அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் ஊழல் வழக்குகளில் உள்ள முன்னாள் அமைச்சர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்த சிக்க போவது யார்?

அந்த வகையில், கனிவளக் கொள்ளை, நகராட்சித்துறை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, வருவாய்துறை, டாஸ்மாக் உள்ளிட்ட துறைகளில் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தவெக அரசு பொறுப்பேற்றதும் , சிறையில் திமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

சமீப நாட்களாக, சட்டமன்றத்தில் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வந்த திமுக முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் ஏ.வ. வேலு உள்ளிட்டோர் அமைதியாகி உள்ளனர். இதற்கு காரணம் ரெய்டு நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறையில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்துவதற்காகச் சுமார் ₹1,000 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டத்தில் முறைகேடு ஆசிரியர் பணியிட மாறுதல், தனியார் பள்ளி அங்கீகாரம் விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அடுத்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இத்தகைய சூழலில், அடுத்து யார் சிக்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source link