திருச்சி கிழக்கில் விஜய் நாளை மனு தாக்கல்

சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள விஜய், கடந்த மார்ச் 30ம் தேதி பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதன் தொடர்ச்சியாக, தான் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில், நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம், நாளை காலை விஜய் திருச்சி செல்கிறார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, அரியமங்கலம் மாநகராட்சி கோட்ட அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

பின், மரக்கடை பகுதியில் உள்ள தனியார் இடத்தில், பிரசாரம் செய்யவும் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக காந்தி மார்க்கெட் போலீஸ் உதவி கமிஷனரிடம் த.வெ.க.,வினர் மனு அளித்தனர். அதன்படி, வேட்பாளர் விஜய், ஒரு வாகனத்தில் வந்து வேட்பு மனு செய்து விட்டு, பகல் 12:30 மணிக்கு மரக்கடை பகுதியில் பஸ்சில் நின்று பிரசாரம் செய்ய அனுமதி அளித்தனர்.

விஜயை யாரும் வாகனங்களில் பின் தொடரக்கூடாது. பிரசார கூட்டத்துக்கு குழந்தைகள், மகளிர், முதியோர், கர்ப்பிணியருக்கு அனுமதியில்லை என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.

Source link