இத்தாலி அணிக்கு கடைசி வாய்ப்பு * உலக கோப்பை கால்பந்தில் பங்கேற்க

ஜெனிகா: ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இத்தாலி, போஸ்னியா அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி ‘உலக’ தொடருக்கு தகுதி பெறும்.

‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், வரும் ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்க உள்ளன. இதுவரை 42 அணிகள் தகுதி பெற்றன.

இன்று ஐரோப்பா (4), ‘இன்டர் கான்பெடரேஷன்’ (2) பிரிவில் கடைசி கட்ட தகுதிச்சுற்று போட்டிகள் நடக்கின்றன. இதில் 6 அணிகள் தேர்வாக உள்ளன.

ஐரோப்பிய பிரிவில் ஜெனிகாவில் நடக்கும் போட்டியில் 4 முறை சாம்பியன் ஆன இத்தாலி அணி, போஸ்னியா அண்டு ஹெர்ஸ்கோவினா அணியை சந்திக்கிறது. இதில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இத்தாலி களமிறங்குகிறது.

ஒருவேளை தோற்கும் பட்சத்தில் 2018, 2022, தற்போது 2026 என தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். தகுதிபெறவில்லை.

மற்ற போட்டிகளில் சுவீடன்-போலந்து, துருக்கி-கொசோவா, டென்மார்க்-செக் குடியரசு, ஈராக்-பொலிவியா, ஜமைக்கா-காங்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Source link