மக்காவ்: உலக கோப்பை டேபிள் டென்னிஸ் முதல் போட்டியில் மணிகா பத்ரா வெற்றி பெற்றார்.
சீனாவின் சிறப்பு நிர்வாகத்தில் உள்ள மக்காவில் ஆண்கள், பெண்களுக்கான உலக கோப்பை டேபிள் டென்னிஸ் நடக்கிறது. மொத்தம் 16 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். முதலில் போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவர், ‘ரவுண்டு-16’ சுற்றுக்கு முன்னேறலாம்.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் மணிகா பத்ரா, ‘குரூப்-4’ல் இடம் பெற்றுள்ளார். முதல் போட்டியில் மணிகா பத்ரா, ஜப்பானின் மிவா ஹரிமோட்டாவை எதிர்கொண்டார். இதன் முதல் இரு செட்டை 11-7, 11-2 என எளிதாக வசப்படுத்திய மணிகா, அடுத்த இரு செட்டை 14-16, 5-11 என இழந்தார். 5வது, கடைசி செட்டில் மணிகா 11-6 என அசத்தினார். முடிவில் மணிகா 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
‘குரூப் 2’ல் நடந்த போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, போர்ச்சுகலில் பு யுவை சந்தித்தார். இதில் ஸ்ரீஜா, 1-3 என்ற (11-8, 9-11, 13-15, 8-11) கணக்கில் தோல்வியடைந்தார்.
