ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இனி சுங்க கட்டணம் வசூல்

டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போரைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான வர்த்தக கடல்வழி பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான தன் கட்டுப்பாட்டை, மேற்காசிய நாடான ஈரான் கடுமையாக்கி வருகிறது.

இது தற்போது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையால் முடக்கப்பட்டுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய ஐந்து நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டுமே ஜலசந்தி வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவதாக ஈரான் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு ஈரானின் பார்லிமென்ட் பாதுகாப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டப்படி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அனைத்து சரக்கு கப்பல்களுக்கும், ஈரானிய ரியால் கரன்சியில் கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும் கப்பல்கள் ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கும் தடை விதிக்கும் விதமாகவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Source link