பாலஸ்தீனர்களுக்கு துாக்கு இஸ்ரேலில் புதிய சட்டம்

ஜெருசலேம்: மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் உள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் பார்லிமென்டில் புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, மரணத்தை விளைவிக்கும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் மேற்கு கரை பாலஸ்தீனர்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்படும்.

மேலும், தீர்ப்பு வழங்கப்பட்ட 90 நாட்களுக்குள் அது நிறைவேற்றப்படும்.

இதற்காக நடந்த ஓட்டெடுப்பில் இச்சட்டத்திற்கு ஆதரவாக 62 ஓட்டுகளும், எதிராக 47 ஓட்டுகளும் பதிவானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

Source link