எண் கணிதத்தின் படி, ஒவ்வொரு எண்களையும் ஒரு குறிப்பிட்ட கிரகம் ஆளக்கூடியதாகவும், அதன் அடிப்படையில் பலன்கள் கிடைக்குமா என குறிப்பிடப்படுகிறது. அந்த விதத்தில் ஒரு நபர் என் பிறந்த தேதியின் அடிப்படையில் அந்த கிரகத்தின் அதிக ஆரிக்கத்தை கொண்டிருப்பார். இந்த பதிவில் எந்த எண்ணை சேர்ந்த அவர்கள் சனி பகவானின் ஆதிக்கத்தை கொண்டிருப்பார்கள் என தெரிந்து கொள்வோம்.
எண் கணிதத்தின் படி 8 என்ற எண்ணில் பிறந்தவர் சனி பகவானின் ஆதிக்கத்தையும் அருளையும் பெற்றவராக இருப்பார். அந்த நபருக்கு நல்ல சுகப்பலனை தருவதற்கு முன் கடுமையான சோதனைக்கு உட்படுத்துவார்.எந்த ஒரு மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆம் தேதிகளில் பிறந்த அன்பர்கள் எண் 8-ன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். இவர்கள் சனி பகவானின் எண்ணின் கீழ் பிறந்தவர்கள் என்பதால் எப்படிப்பட்ட சுப பலன்கள் பெறுவார்கள் மற்றும் சோதனைகளை சந்திப்பார்கள் என தெரிந்து கொள்வோம்.
எண் 8- இவர்களுக்கு எதுவும் எளிதில் கிடைப்பதில்லை
எண் கணிதத்தின் படி விதி எண் 8-ஐக் கொண்டவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு விஷயமும் எளிதாக கிடைத்து விடுவதில்லை. குறிப்பாக அவர்களுடைய கல்வி முதல் வேலை அல்லது தொழில் என எதுவாக இருந்தாலும் பல்வேறு தடைகளை சந்தித்து பின்னரே அவர்களால் சாதிக்க முடியும். மேலும் ஒவ்வொரு கட்டத்திலும் சோதனைகளையும், சுமைகளையும் பொறுமையாக தன்னை நிரூபிக்க வேண்டியது இருக்கும். இந்த ஒரு இலக்கையும் அடைவதற்கு மற்றவர்களை விட இருமடங்கு கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும்.
எண் 8-ஐக் கொண்டவர்கள் இவற்றை விரும்புவதில்லை
இவர்கள் எப்பொழுதும் நியாயமாக நடந்து கொள்ள கூடியவர்கள். எனவே இந்த எண்ணில் பிறந்தவர்கள் தங்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு இழைக்கப்படக்கூடிய அநீதியை கொள்ளும் கண்டு ஒருபோதும் அமைதியாக இருக்க மாட்டார்கள்.
சோம்பல் இவர்களுடைய மிகப் பெரிய எதிரியாக இருக்கும். இதனால் ஒரு பணியை சரியான நேரத்தில் முடிக்க அதிக சிரமப்படுவார்கள். அது மட்டும் உங்களுடைய பணிகளை எப்பொழுதும் நேர்மையுடன் மேற்கொள்ள நினைக்கும் நல்ல உள்ளம் கொண்டவர்கள்.
35 வயதிற்குப் பிறகு அதிர்ஷ்டம் மாறுகிறது
எண் கணிதத்தின்படி, எண் 8-ஐக் கொண்டவர்களின் அதிர்ஷ்டம் அவர்களுடைய 35 வயதிற்குப் பிறகு மாறக்கூடியதாக இருக்கும். இந்த வயதிற்கு பின்னால் இவர்களுடைய வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நல்ல முன்னேற்றம் மற்றும் சுப பலன்களை பெறக்கூடியதாக இருக்கும். இவர்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானம் காரணமாக குடும்பத்தை மகிழ்ச்சியாக நடத்தவும், சமூகப் பணிகளுக்காகவும் செலவுகள் செய்யவும் நினைப்பார்கள். மேலும் அவர்களின் நிதிநிலை பெரிய அளவில் மேம்படுவோம். சமூகத்தில் இவர்களுக்கான மரியாதையும் உயரும்.
கடினமான சூழல் இவர்களை வலிமையாக்கும்
எண் 8-ல் பிறந்த அன்பர்கள் மிகவும் மனவலிமை கொண்டவர்களாக இருப்பார்கள். ஏனெனில் இவர்கள் ஒவ்வொரு முயற்சிகள் மேற்கொள்ளும் போதும், முன்னேற்றத்தையும் கடினமான சூழலை எதிர்கொண்ட பின்னரே சாத்தியப்படும்.
எனவே இது போன்ற சூழல் இவர்களை மனதளவில் வலிமை அடைய செய்யும். இதனால் காலப்போக்கில் அவர்களுடைய புரிதலும், செயல்படும் திறமையும் சிறப்பானதாக மாறும். மேலும் எந்த ஒரு விஷயத்தை அணுகும் போது நடைமுறைக்கு ஏற்ற விஷயங்களையே செய்ய நினைப்பார்கள். மேலும் எந்த ஒரு விஷயத்தையும் ஒழுக்கத்துடன் செய்து முடிப்பார்கள்.
பொறுப்புத் துறப்பு
இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் முற்றிலும் உண்மையானவை அல்லது துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. விரிவான தகவல்களுக்கு, தயவுசெய்து தொடர்புடைய நிபுணரை அணுகவும்.
