மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, தெற்காசிய நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவிலும் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதே நேரத்தில் தொடர்ந்து வரும் போர் சூழலால் இந்த நிலை நீடிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன. ஏற்கனவே வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக இன்று சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. ரூபாய் 243.50 ஆக இருந்த வணிக சிலிண்டரின் விலை ஒரே நாளில் 203 ரூபாய் அதிகரித்து 2246.50 என விலை உயர்ந்துள்ளது. அதேநேரம் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.
