மாஸ்கோ: கிரிமியாவில் ரஷ்ய ராணுவப் போக்குவரத்து விமானம் மலைப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் 29 பேர்

மாஸ்கோ: கிரிமியாவில் ரஷ்ய ராணுவப் போக்குவரத்து விமானம் மலைப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2014ம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து ரஷ்யா இணைத்துக் கொண்ட கருங்கடல் தீபகற்ப பகுதியான கிரிமியாவில் பறந்து கொண்டிருந்த ஏ.என்.-26 ரக விமானம் திடீரென கட்டுப்பாடு மையத்துடனான தொடர்பை இழந்தது. அதன்பிறகு, நடத்தப்பட்ட விசாரணையில், செங்குத்தான மலைப்பாறையில் விமானம் மோதி விபத்துக்குள்ளாகி, நொறுங்கி கீழே விழுந்தது தெரிய வந்தது.

இந்த விபத்தில் 23 பயணிகள் உள்பட 29 பேர் உயிரிழந்ததை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link