அன்பழகன் குடும்பத்தினர் அதிருப்தி; அமைச்சர் தலைமையில் சமாதானம்

நமது நிருபர்

க டந்த 2021 சட்டசபை தேர்தலில், முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு, சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல் பேராசிரியர் அன்பழகன் குடும்பத்திற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என, முதலியார் சமூக பிரமுகர்கள் எதிர்பார்த்தனர்.

இதையடுத்து, அன்பழகன் பேரன் வெற்றியழகனுக்கு, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இரண்டாம் முறையும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அன்பழகன் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதையடுத்து, அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை அன்பழகன் வீட்டிற்கு அழைத்து சென்று, அவரது படத்திற்கு, மலர் துாவி மரியாதை செய்தார். அத்துடன் அவர் குடும்பத்தினருடன், அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Source link