மகளிர் ஆசியக் கோப்பை 2026 தொடரின் 9ஆவது லீக் போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் மோதின. இந்திய மகளிர் அணி, ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், அரையிறுதிக்கு முன்னேற இப்போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி இருந்தது.
இப்படி, முக்கியத்துவம் மிக்க போட்டியில், இந்திய மகளிர் அணி 55 ரன்களை மட்டும் அடித்து சொதப்பியது. இறுதியில், இந்திய மகளிர் அணி, 8.4 ஓவர்களில் வென்று அசத்தியது.
சீன் போட்ட பாகிஸ்தான் கேப்டன்: இப்போட்டியில், 56 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய மகளிர் அணியில், ஷபாலி வர்மா விக்கெட்டை, பாகிஸ்தான் அணிக் கேப்டன் பாத்திமா சனா எடுத்துக் கொடுத்தார். 1.3ஆவது பந்தில், பாத்திமா சனா வீசிய பந்தை ஷபாலி வர்மா, லெக் திசையில் தட்ட முயன்றபோது, பந்து எட்ஜ் ஆகி, பௌலர் கைக்கு நேராக சென்றது.
அந்த கேட்சை பிடித்த உடனே, ஷபாலி வர்மாவை நோக்கி, வெளியே போ என்ற சைகையை பாத்திமா சனா செய்தார். இது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வெறும் 55 ரன்களை அடித்ததற்கே இவ்வளவு சீன் என்றால், 200 ரன்களை அடித்திருந்தால், ஒவ்வொரு பந்திற்கும் சீன் போட்டிருப்பார்கள் என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
பாகிஸ்தான் படுதோல்வி: இப்போட்டியில், முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி, 4.2 ஓவர்கள் முடிவுவரை 27/0 என்ற நிலையில் இருந்தது. அதன்பிறகு, தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். 4.3, 5.2, 5.6 என பவர் பிளேவின் கடைசி நேரத்தில், அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்தார்கள். பிறகு, 8, 9, 10 ஆகிய ஓவர்களிலும் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து, 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து தடுமாறினார்கள். இந்த 10 ஓவர்களில் 36 ரன்களைதான் எடுத்தனர்.
பிறகு, விக்கெட்களை பறிகொடுக்க கூடாது என்பதற்காக எய்மன் பாத்திமா, இம் இ ஹனி, துபா ஹஸ்ஸன் ஆகியோர் டெஸ்ட் ஆட ஆரம்பித்தனர். இந்த மூன்று பேரும் சேர்ந்து, 44 பந்துகளில் 20 ரன்களைதான் சேர்த்தார்கள். இதனால்தான், பாகிஸ்தான் அணி, 18.1 ஓவர்கள் முடிவில் வெறும் 55/10 ரன்களை எடுத்து ஆல்அவுட் ஆகி, மோசமான வரலாறை படைத்தது.
அதாவது, பாகிஸ்தான் மகளிர் அணியின் குறைந்த ஸ்கோர் இதுதான். இதற்குமுன், 2024ஆம் ஆண்டில், இதே மைதானத்தில், நியூசிலாந்துக்கு எதிராக 56 ரன்களை எடுத்திருந்ததுதான் இவர்களின் மோசமான ஸ்கோராக இருந்தது.
இப்போட்டியில், தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் மகளிர் அணிக்கு, பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இனி, கடைசி லீக் போட்டியில், ஹாங் ஹாங் அணியை வீழ்த்தினால்தான், பாகிஸ்தான் மகளிர் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கும். தோல்வியை சந்தித்தால், ஹாங் ஹாங் மகளிர் அணி அல்லது தாய்லாந்து மகளிர் அணிகளில் ஒன்று, நெட் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறும். இதனால், பாகிஸ்தான், ஹாங்ஹாங் லீக் போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
