தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற நிலையில், மார்ச் 30-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதனிடையே அரசியல் கட்சியினர் அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்கள் தேர்வு – நயினார் நாகேந்திரன்
என்.டி.ஏ கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிடும் பா.ஜ.க. கட்சி இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களை தேர்வு செய்து அனுப்பி இருக்கிறோம். ஏப்ரல் 3-ந் தேதி புதுச்சேரி வரும் பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறார். அப்போது மாவட்ட தலைவர்கள் அவரை சந்திக்க உள்ளனர். அதன்பிறகு ஏப்ரல் 4 மற்றும் 6 என வேட்புமனு தாக்கல் செய்ய 2 நாட்கள் உள்ளது. இந்த நாட்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்வார்கள் என்று கூறியுள்ளார்.
த.வெ.க பிரச்சாரத்திற்கு அனுமதி
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உஎன இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், பெரம்பூரில் நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2-ந் தேதி திருச்சியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யும் விஜய், பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 2-ந் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
ஏப்ரல் 3-ந் தேதி தி.முக. ஆலோசனை கூட்டம்
சட்டசபை தேர்தலுக்காக நேற்று (மார்ச் 31) திருவாரூரில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி மற்றும் கரூரில் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், தி.மு.க நிர்வாகிகளுடன் ஏப்ரல் 3-ம் தேதி காணொலி மூலம் அனைத்து தொகுதி நிர்வாகிகள், தேர்தல் வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
-
Apr 01, 2026 08:39 IST
பா.ம.க தேர்தல் அறிக்கை இன்று வெளியிடுகிறார் அன்புமணி ராமதாஸ்?
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ள அன்புமணி தலைமையிலான பா.ம.க 18 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிடுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
-
Apr 01, 2026 08:34 IST
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய துரைமுருகன் மீது வழக்குப்பதிவு
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது மகன் கதிர் ஆனந்த் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துரைமுருகனை வரவேற்க சென்ற தொண்டர்கள் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாகவும், போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் ஊர்வலம் நடத்தியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Apr 01, 2026 08:16 IST
திருச்சி கிழக்கில் வேட்பாளருடன் டீ சாப்பிட்ட மு.க.ஸ்டாலின்
திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட்டில் வாக்கிங் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த டீக்கடை ஒன்றில் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், இனிகோ இருதயராஜ் ஆகியோரோடு இணைந்து
டீ அருந்தினார். -
Apr 01, 2026 07:50 IST
பிரேமலதா விஜயகாந்த் இன்று முதல் தேர்தல் பிரச்சாரம்
சட்டசபை தேர்தலுக்காக தே,மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். திருத்தணியில் இன்று மாலை தனது பிரச்சார்தை தொடங்கும் அவர், ஏப்ரல் 21-ந் தேதி விருத்தாச்சலத்தில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
-
Apr 01, 2026 07:48 IST
மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி மற்றும் கரூரில் பிரச்சாரம்
சட்டசபை தேர்தலுக்காக நேற்று (மார்ச் 31) திருவாரூரில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி மற்றும் கரூரில் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், காலை 9 மணிக்கு திருச்சி உழவர் சந்தை பகுதியிலும், மாலை 5 மணிக்கு கரூர் ராயனூரில் நடைபெறும் பொதுக்கூடடங்களில் பங்கேற்று தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
