முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்ற ரூ.6.17 கோடி: ஆர்டிஐ மூலம் வெளியான தகவல்? – rs 6 point 17 crore allocated to shift cm vijay office to namakkal kavignar maligai rti reveals

தமிழக முதல்வர் விஜய்யின் அலுவலகம் தற்போது தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகளுக்காக ரூ.6.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டிஐ மூலம் கிடைத்துள்ள இந்த தகவல், முதல்வர் அலுவலகம் மாற்றம் தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ தகவலாக வெளியாகியுள்ளது.

ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்

சமீபத்தில் தமிழக முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் புதிய தலைமைச் செயலகம் அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டம் ஒருபுறம் செயல்பாட்டில் இருக்கும் நிலையில், தற்போதைய அலுவலக இடநெருக்கடியை சமாளிக்கும் வகையில் முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்காக ரூ.6.17 கோடி செலவிடப்பட உள்ளதாக ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

நாமக்கல் கவிஞர் மாளிகையில் புதிய அலுவலகம்

ஏற்கனவே நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் முதல்வருக்கான புதிய அலுவலகத்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அங்கிருந்து சென்னை கடற்கரையை பார்க்கும் வகையில் முதல்வரின் அலுவலகம் அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…இது தான் பிரேகிங் நியூஸ்

புதிய தலைமைச் செயலகத்திற்கான ரூ.1,200 கோடி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்காக ரூ.6.17 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது தற்போது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

Source link