Duleep Trophy Final – 135 பந்தில் காட்டடி அடித்த இஷான் கிஷன்: முதல் நாளிலேயே மெகா ரன் குவிப்பு – duleep trophy 2026 final day 1 scorecard

துலீப் டிராபி 2026 தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதி, அரையிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்று முடிந்து, தற்போது இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப் போட்டியில், சௌத் ஜோன் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஈஸ்ட் ஜோன் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஈஸ்ட் ஜோன் இன்னிங்ஸ்: முதலில் களமறிங்கிய ஈஸ்ட் ஜோன் அணியில், ஓபனர்கள் அபிமன்யு ஈஸ்வரன், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு அசத்தினார்கள். குறிப்பாக, இருவரும் அதிரடி துவக்கத்தை கொடுத்ததால், ஈஸ்ட் ஜோன் அணி, முதல் 10 ஓவர்களிலேயே 70 ரன்களை எட்டியது.

அடுத்து, வைபவ் சூர்யவன்ஷி, 37 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 44 ரன்களை சேர்த்து அவுட் ஆனார். மற்றொரு ஓபனர் அபிமன்யு ஈஸ்வரன் 86 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 72 ரன்களை சேர்த்தார். அடுத்து, ஒன்டவுன் பேட்டர் ஷிகர் மோகன் சிறப்பாக செயல்பட்டு 120 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 85 ரன்களை குவித்ததால், ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.

4ஆவது இட பேட்டர் சுதிப் கராமி சிறப்பாக செயல்படவில்லை. 25 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன்னைதான் சேர்த்தார்.

பெரிய பார்ட்னர்ஷிப்: அடுத்து கேப்டன் இஷான் கிஷன், குமார் குஷக்ரா இருவரும் இணைந்து பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்கவே முடியவில்லை. இவர்கள் இருவரும் 160 பந்துகளை எதிர்கொண்டு, அதில் 144 ரன்களை சேர்த்து, களத்தில் இருக்கிறார்கள்.

இஷான் கிஷன், 135 பந்துகளில் 14 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 111 ரன்களை சேர்த்த நிலையில், குமார் குஷக்ரா 74 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 63 ரன்னை எடுத்து விளையாடி வருகிறார். இந்த இருவரும் களத்தில் இருக்கும் போது, முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஈஸ்ட் ஜோன் அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 385/4 ரன்களை சேர்த்து அசத்தியது.

சௌத் ஜோன் அணி பௌலர்களில் முகமது சிராஜ் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர், 14 ஓவர்களில் 6.9 எகனாமியில் 96 ரன்களை வாரி வழங்கினார். சமா வி மிலிந்த் 13 ஓவர்களில் 56 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார். ஷ்ரேயஸ் கோபால் 19 ஓவர்களை வீசி, 77 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. திரிபுனரா விஜய் 22 ஓவர்களில் 114 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை சாய்த்தார்.

கண்காணித்த அஜித் அகார்கர்: இந்திய டெஸ்ட் அணி பலவீனமாக இருக்கும் நிலையில், துலீப் டிராபி பைனலை, இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் பார்வையிட்டார். இதன்மூலம், துலீப் டிராபி 2026 பைனலில் சிறப்பாக செயல்படும் வீரருக்கு சிறப்பாக செயல்படும் வீரருக்கு, அடுத்து நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பைனலில் இஷான் கிஷன், முகமது ஷமி போன்றவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

Source link