திருச்சி: கூட்டணி கட்சிகள் ஏன் அதிமுக சின்னத்தில் போட்டியிடவில்லை? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி

திருச்சி: கூட்டணி கட்சிகள் ஏன் அதிமுக சின்னத்தில் போட்டியிடவில்லை? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் 9 பேரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: முழு சந்திரமுகியாகவே மாறிவிட்டார் இபிஎஸ். அவர் ஆட்சிக்கு வந்தால், எல்லோரையும் அடகு வைத்து விடுவார். தமிழகத்தை விற்று விடுவார். டூர் மோடில் இருக்கும் பிரதமர் மோடி பொத்தாம் பொதுவாக திமுக மீது குற்றச்சாட்டு கூறுகிறார்.

ஒரு வாரம் தமிழகத்துக்கு வந்து தங்கி இருந்தால் இங்கு செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் அவருக்கு தெரியும். தமிழகம் எவ்வாறு தலை நிமிர்ந்து சிறந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். நாம் போராடுவது திமுக வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழகம் வெற்றிக்காக; பாஜ., டப்பா இன்ஜின் முன்னாடி திமுக சூப்பர் பாஸ்ட் இன்ஜின் தலை குனியாது. எல்லா இடங்களிலும் கூட்டணியில் பிரச்னையில்லை என்று சொல்கிறீர்களே?

பின் ஏன் டில்லிக்கு சென்றீர்கள்; கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்றால், கூட்டணி கட்சிகள் ஏன் அதிமுக சின்னத்தில் போட்டியிடவில்லை? கடந்த முறை திருச்சியிலுள்ள 9 தொகுதிகளிலும் மக்கள் வெற்றியை தந்தார்கள்; இம்முறையும் 100% வெற்றி கிடைக்கும்; கடந்த 5 ஆண்டுகளில் பல முத்திரை திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். கொடுத்த வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டேன். மறுக்கவும் மாட்டேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஓட்டு சேகரிப்பு

திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட்டில் வாக்கிங் சென்று முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களுடன் சாலையோர டீக்கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.

Source link