டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகளுக்கு செக்? சரக்கு கோரிக்கையில் வந்த புதிய கட்டுப்பாடு – தவெக அரசு அதிரடி – tasmac liquor stock order 120 percent limit distribution new rules

மதுபானக் கொள்முதல், டெண்டர் முறைகேடு, சட்டவிரோத பார்கள் இயக்கம் மற்றும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தது மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது, இதனைத் தொடர்ந்து தவெக அரசு பொறுபேற்றது டாஸ்மாக் கடைளுக்கு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

TVK அரசின் புது சாதனை!ஒரே TENDER க்கு 9 பேர் போட்டி! யாரும் செய்யாததை செய்யும் CM

தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம், மாநிலம் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளையும், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களையும் நடத்தி வருகிறது.

விற்பனை மற்றும் வருவாய் விவரங்கள்:

சில்லறை விற்பனை மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. வார விடுமுறைகள் மற்றும் பண்டிகைக் காலங்களில் விற்பனை பல மடங்கு உயர்கிறது. தீபாவளி பண்டிகையின் 3 முதல் 4 நாட்களில் மட்டும் 750 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை செய்யப்படுகிறது. புத்தாண்டு மற்றும் பொங்கல் சமயங்களிலும் விற்பனை புதிய சாதனைகளைப் படைப்பது வழக்கம். கடைகளில் 180 மி.லி, 360 மி.லி மற்றும் 720 மி.லி ஆகிய அளவுகளில் மதுபானங்கள் விற்கப்படுகின்றன.

புதிய நடைமுறை மாற்றம்:

குறிப்பிட்ட சில நிறுவனங்களின் மதுபானங்கள் மட்டுமே கடைகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், அதில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாகவும் மதுப்பிரியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்தச் சூழலில், மதுபானங்களை கொள்முதல் செய்வதற்கான புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதாக டாஸ்மாக் நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.

செப்.10ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளுக்கான சரக்கு கோரிக்கையை கையடக்கக் கருவி (Handheld Device) மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு கடைக்கும் தேவையான மதுபானங்களின் அளவு, அந்தக் கடையின் முந்தைய விற்பனை அடிப்படையில் கணிணி மூலம் தானாக உருவாக்கப்படும்; முதல் முறையாக மட்டும் மேற்பார்வையாளரின் கோரிக்கை அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படும்.

பிராண்ட் பெயர், பேக் அளவு மற்றும் தேவையான சரக்கு அளவு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும். தேவையெனில், அதிகபட்சம் 120% வரை அதிகரிக்க முடியும். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவை குறைக்க முடியாது.நாள் முடியும் வரை சரக்கு கோரிக்கையை சமர்ப்பித்த பின்னரும் அதன் அளவை மேற்பார்வையாளர் மாற்றியமைக்கலாம்; மேற்பார்வையாளரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP சரிபார்ப்புக்குப் பிறகே கோரிக்கை சமர்ப்பிக்கப்படும்.

கையடக்கக் கருவியில் உறுதிப்படுத்தல் பக்கத்தை அச்சிட்டு வைத்துக்கொள்ளலாம். அச்சு நகலை டெப்போவில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.2வது சரக்கு கோரிக்கையிலிருந்து மாவட்ட மேலாளரின் அனுமதி தேவையில்லை.தானியங்கி முறையில் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த நடைமுறையால் என்ன மாற்றங்கள் நடக்கும்?

இது குறித்து விற்பனையாளர்கள் கூறுகையில் முந்தைய விற்பனையை அடிப்படையாகக் கொண்டு கணினியே சரக்கு தேவையை கணக்கிடுவதால், கடைகளுக்கு தேவையற்ற அளவு சரக்கு கோருவது குறையலாம். எந்த பிராண்ட், எந்த அளவு பேக், எவ்வளவு தேவை என்பதற்கு முந்தைய விற்பனை தரவு அடிப்படையாக இருக்கும். இதனால் அதிகம் விற்பனையாகும் மதுபானங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். கணினி நிர்ணயித்த அளவை குறைக்க முடியாது; அதே நேரத்தில் அதிகபட்சம் 120% வரை மட்டுமே அதிகரிக்க முடியும். இதனால் சரக்கு கோரிக்கையில் அதிகப்படியான மாற்றங்களுக்கு கட்டுப்பாடு வரும். மாவட்ட அளவில் ஒவ்வொரு கடையின் விற்பனை மற்றும் சரக்கு கோரிக்கையை ஒப்பிட்டு பார்க்க முடியும். 2வது கோரிக்கையிலிருந்து மாவட்ட மேலாளர் அனுமதி தேவையில்லாமல் தானியங்கி அனுமதி வழங்கப்படுவதால், சரக்கு கோரிக்கை விநியோக செயல்முறை விரைவாகலாம். இந்த நடைமுறை டாஸ்மாக் சரக்கு விநியோகத்தை டிஜிட்டல் மயமாக்குவதுடன், சரக்கு கோரிக்கையில் மனித தலையீடு மற்றும் முறைகேடுகளுக்கான வாய்ப்பை குறைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

Source link