CSK – 22 வயது டெல்லி வீரரை டார்கெட் செய்த தோனி: 5ஆவது இடத்தில் ஆட வைக்க முடிவு: செம்ம தேர்வு – ms dhoni selected delhi young player for csk team 5th batting place

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், சீனியர்களை படிப்படியாக குறைத்துவிட்டு, அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை கட்டமைக்கும் வேலையை துவங்கிவிட்டனர்.

குறிப்பாக, தரமான இளம் வீரர்களை கண்டறிந்து, அவர்களை சிஎஸ்கேவிற்குள் கொண்டு வரும் பணியை மகேந்திரசிங் தோனி ஏற்றுக் கொண்டுள்ளாராம். அணியின் ஆலோசகராக பணி செய்ய உள்ள தோனி, அடுத்த 10 வருடங்களுக்கான அணியை, ஐபிஎல் 2028 சீசனில் இருந்து கட்டமைக்க முடிவு செய்துள்ளார்.

குறிப்பாக, சிஎஸ்கேவின் மிடில் வரிசையில் தரமான இளம் பேட்டர் யாரும் இல்லை. சர்பரஸ் கான், ஷிவம் துபே ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களால் அதிரடியாக ஆட முடியவில்லை. மேலும், கார்த்திக் சர்மா, தனது முதல் சீசனில் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டார். இதனால், இவரை அணியில் வைத்துக் கொள்ள தோனி முடிவு செய்துள்ளார்.

மற்றபடி சர்பரஸ் கான், ஷிவம் துபே ஆகியோரை ஐபிஎல் 2028 சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் கழற்றிவிட தோனி முடிவு செய்துள்ளார். மேலும், துபே விளையாடி வந்த 5ஆவது இடத்தில், தரமான அதிரடி பேட்டரை விளையாட வைக்கவும் தோனி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்படி, 5ஆவது இடத்தில் சிறப்பாக விளையாடக் கூடிய பேட்டர் யார் என்பது குறித்து தோனி, தீவிரமாக தேடி வந்த நிலையில், டெல்லியை சேர்ந்த தேஜஸ்வி தகியாவை தேர்வு செய்துள்ளாராம். இவர், வலது கை விக்கெட் கீப்பர் பேட்டராக இருக்கிறார். 24 வயதாகும் இவர், தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், 3 கோடி மதிப்பில் இருக்கிறார். இவரை, ஐபிஎல் 2028 சீசனுக்கான மெகா ஏலத்திற்குமுன் கழற்றிவிடவே அதிக வாய்ப்புள்ளது.

அப்படி, ஏலத்திற்கு வரும் தஹியாவை வாங்க, தோனி முடிவு செய்துள்ளாராம்.

டெல்லியில் நடைபெற்றும் வரும் டெல்லி பிரிமியர் லீக் தொடரில், 21 போட்டிகளில் 42 சராசரியில், 185.80 ஸ்ட்ரைக் ரேட்டில் 630 ரன்களை குவித்துள்ளார். இதில், 53 சிக்ஸர்களும் அடங்கும். மொத்தம் 7 அரை சதங்களை அடித்துள்ளார். குறிப்பாக, ஒரு போட்டியில், வெளும் 12 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார்.

இவரது, சிறப்பம்சமே, 10ஆவது ஓவருக்கு பிறகு களமிறங்கி, கடைசி கட்டம் வரை அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பதுதான். குறிப்பாக, கடைசிவரை களத்தில் இருக்கும் ஆற்றலும் இவரிடம் இருக்கிறது. ஆகையால், சிஎஸ்கேவுக்கு வந்தால், இவரை தோனி பெரிய பினிஷராக மாற்ற முடியும். இதனால்தான், தஹியாவை தோனி டார்கெட் செய்திருப்பதாக கருதப்படுகிறது.

மேலும், ஐபிஎல் 2028 சீசனுக்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல மாற்றங்களை செய்ய சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக, கேப்டன்ஸி மாற்றம், ஓபனர் இடத்தில் மாற்றம் போன்ற விஷயங்களை செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.

குறிப்பாக, கேப்டன் பதவியை கேட்டு, அணி நிர்வாகத்திற்கு தொடர் அழுத்தம் கொடுக்கும் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் இருவரையும், அடுத்த சீசனோடு கழற்றிவிடவும் சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link