மேட்டூர்: மேட்டூர் தொகுதி தவெக வேட்பாளர், ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி அவரை ஊருக்குள் நுழைய விடாமல் அக்கட்சியினரே தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டப்பேரவை தொகுதியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக செல்வம் போட்டியிடுகிறார். இவர் ஒவ்வொரு பகுதியாக சென்று நிராவாகிகளை சந்தித்துப் பேசி வுருகிறார். இந்நிலையில் வேட்பாளர் செல்வம் நேற்றிரவு நிர்வாகிகளை சந்திக்க கொளத்தூர் பகுதிக்கு வந்தார்.
அப்போது, கொளத்தூர் 4 ரோடு பகுதியில் இருந்த தவெக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரது காரை மறித்ததோடு, ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, வேட்பாளருடன் வந்திருந்த நிர்வாகிகள் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாமல் வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
