கடலூர் தவெக தெற்கு மாவட்ட செயலாளர் ராஜி என்கிற ராசப்பா, சுங்கச்சாவடியில் தவெக விசிட்டிங் கார்டை காட்டி கட்டணம் செலுத்தாமல் சென்றதாக கூறப்படும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். “Power of My அக்கா” என அவர் பதிவிட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அவரது செயலுக்கு இணையத்தில் கடும் எதிர்வினைகள் எழுந்துள்ளன.
கடலூர் தவெக தெற்கு மாவட்ட செயலாளரான ராஜி என்கிற ராசப்பா, கொத்தட்டை பகுதியில் காரில் பயணம் செய்தபோது சுங்கச்சாவடியில் தனது தமிழக வெற்றிக் கழக விசிட்டிங் கார்டை காண்பித்து கட்டணம் செலுத்தாமல் சென்றதாக கூறப்படும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“Power of My Akka” என பதிவிட்ட தவெக நிர்வாகி
அந்த வீடியோவில், சுங்கச்சாவடியில் தனது தவெக அடையாள அட்டையை காண்பித்துவிட்டு சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்றதாக தெரிகிறது. மேலும், “Power of My Akka”எனக் குறிப்பிட்டு அவர் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், தவெக நிர்வாகியின் செயலுக்கு இணையத்தில் கடும் எதிர்வினைகள் எழுந்துள்ளன.
தவெக நிர்வாகியின் செயலால் எழும் கேள்விகள்
தமிழக அரசு பொறுப்பேற்றபோது, லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத நிர்வாகத்தை வழங்குவோம் என ஆட்சியாளர்கள் வலியுறுத்தியிருந்தனர். அதேபோல், முதல்வர் தனது பதவியேற்பு நாளில் தமிழக வெற்றிக் கழகத்தில் ‘பவர் சென்டர்கள்’ என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தவறு செய்வதற்கு யாரும் அஞ்சும் வகையில் கட்சி செயல்படும் என்றும் கூறியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், கட்சி நிர்வாகி ஒருவர் சுங்கச்சாவடியில் அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் செலுத்தாமல் சென்றதாக வெளியாகியுள்ள வீடியோ, கட்சியின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் தவெக நிர்வாகிகள்?
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வது, அதிகாரிகளிடம் தலையிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.இந்த நிலையில், சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் சென்றதாக வெளியாகியுள்ள இந்த வீடியோவும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்கள் கட்சியின் தலைமை கூறும் கொள்கைகளுக்கு முரணானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Source link
