‘கரூர் கேங்’, Power Broker.. டாஸ்மாக் முறைகேடு :அமலாக்கத்துறை அறிக்கையை.. திமுகவை வெளுத்து வாங்கிய முதல்வர் – tasmac irregularities chief minister vijay slams dmk, citing the enforcement directorate report

தமிழ்நாட்டில் தவெக அரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜய் பொறுப்பு வகிக்கும் காவல்துறையின் மானியக் கோரிக்கை மீது கடந்த வியாழக்கிழமை விவாதம் தொடங்கியது.

மரகத முதலமைச்சர் CM VIJAY! ஆதவ் அர்ஜுனன் சொன்ன Message

முதல்வர் விஜய் பதிலுரை,

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசினர். உதயநிதி பேசும்போது குறுக்கிட்ட முதலமைச்சர் திங்களன்று விரிவாகப் பதில் அளிப்பதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சட்டமன்றம் இன்று தொடங்கிய உடனே தங்களின் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சிகள் முழக்கம் திமுக சட்ட உறுப்பினர்கள் தலைநகரமா, கொலைநகரமா என்று முழக்கங்களை எழுப்பினார்கள்.

தொடக்கத்திலேயே சட்டமன்றத்தில் அமளி நிலவியது. இதனைத் தொடர்ந்து முதல்வர் பதிலுரை வழங்கினார். அப்போது பேசியவர், அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் மக்களையோ பெண்களையோ தரம் தாழ்த்தி பேச வேண்டாம்.தமிழ்நாட்டில் ஆபாச நதியா வன்ம நதியா ஓடுகிறது; நம் வீட்டில் உள்ள தாய், அக்கா, தங்கச்சியாக இருப்பது அதே பெண்கள்தான்; அதை மனதில் வைத்து பேச வேண்டும்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் பிரசாத், ஈ.ரமேஷ், பிரபு மற்றும் பெயர் தெரியாத பல அரசு அதிகாரிகள் உட்பட பலர் கட்சி நிதி என்ற பெயரில் பெருமளவில் லஞ்சம் வசூலித்துள்ளதாக அமலாக்கத்துறை (ED) தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சதி

இதுமட்டுமின்றி, மற்றொரு அரசுத் துறையிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தையும் அமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. 2021-ஆம் ஆண்டு முதல் நேர்மையற்ற நோக்கத்துடன், குற்றவியல் சதியில் ஈடுபட்டு அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு

கடந்த ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் துறையைத் தன் வசம் வைத்திருந்த முன்னாள் அமைச்சருடன் இணைந்து, ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் ‘ரதீஷ்’ என்ற தனி நபர், டிஆர்டிஓ (DRDO) அளவிலான உயர் அதிகாரிகளின் இடமாற்றம் (Transfer) வரை அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரப் தரகராக (Power Broker) செயல்பட்டுள்ளார். இவரது உத்தரவின் பேரில் தான் டாஸ்மாக் மேலாண் இயக்குநராக (MD) இருந்த ஐஏஎஸ் அதிகாரியே செயல்பட்டுள்ளார் என்றும், தவெக அரசு அமைந்த பிறகு இவர் துபாய்க்குத் தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டதாகவும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

அண்ணன் – தம்பி கூட்டணி முறைகேடு

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரும் டாஸ்மாக் போக்குவரத்து டெண்டர்களில் தலையிட்டு, முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த நிதி முறைகேடுகள், 2021 முதல் 2025 வரையிலான காலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி நிதி என்ற பெயரில் வசூல்

கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், டாஸ்மாக் பார்களின் உரிமையாளர்களிடம் இருந்து ‘கட்சி நிதி’ என்ற பெயரில் பெரும்தொகையைக் கட்டாய வசூல் செய்துள்ளதும் அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ‘கரூர் கேங்’ என்ற பெயரில் இயங்கிய அரசியல் பிரமுகர்கள், டாஸ்மாக் பார் உரிமையாளர்களிடமிருந்து ‘கட்சி நிதி’ என்ற பெயரில் சட்டவிரோதமாகப் பெருந்தொகையை வசூலித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளை விவரிக்க அமலாக்கத்துறை தனது அறிக்கையில் மால்ப்ராக்டீஸ் (Malpractice), ஃபிராடு (Fraud), மேனிபுலேஷன் (Manipulation), அப்யூசிங் பவர் (Abusing power), ‘கரூர் கேங்’ மற்றும் ‘ஆர்கனைஸ்டு கிரைம் சிண்டிகேட்’ (Organised crime syndicate) போன்ற கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளது.

உயர்நீதிமன்றம் ஜாமீனை நிராகரித்த போதும், உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய போதும் எந்த நீதிமன்றமும் வழக்கின் விசாரணையையே நடத்தக்கூடாது எனத் தடை விதிக்கவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் டாஸ்மாக்கை அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பின்னணியையும் மக்கள் கவனித்து வருவதாகத் முதல்வர் விஜய் கூறினார்.

Source link