மதுரை: தவெக பற்றியும், விஜய் பற்றியும் விமர்சிக்க மாட்டேன் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
மதுரை மத்திய தொகுதி தேஜ கூட்டணி வேட்பாளர் சந்தர் சி நிருபர்களிடம் கூறியதாவது: அனைவருக்கும் வணக்கம், நான் இதுவரைக்கும் எத்தனையோ பேட்டிகள் கொடுத்து இருக்கிறேன். தற்போது முதல்முறையாக முற்றிலும் மாறுபட்ட களத்தில் இருந்து பேட்டி கொடுக்கிறேன். ரொம்ப சந்தோஷமான செய்தி. மதுரை மத்திய தொகுதி மக்கள் நல்ல செய்தியை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
மதுரை மத்திய தொகுதி மக்கள் வெற்றிக்கனியை தருவார்கள். இனி மாதத்தில் 15 நாட்கள் மதுரையில் தான் இருக்கும். திரைப்பட துறையில் 30 வருடமாக வேணும் என்று சொல்கிற அளவுக்கு பணிபுரந்து இருக்கிறேன். எனது அடுத்தக்கட்ட நகர்வு என்பது தேர்தல்முடிவுகளை பொறுத்து தான் இருக்கும். கண்டிப்பாக தேர்தலில் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது. எந்த வகையிலும் வன்முறை என்பது தண்டிக்க கூடிய ஒன்றாகும்.
வன்முறை அசிங்கமான விஷயம்.என்னை மாதிரி பொது ஜனங்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு காரணம், இந்த மாதிரி சம்பவங்கள் தான், இப்படியே போய் கொண்டிருந்தே நாடு எங்கே செல்கிறது என்று தெரியவில்லை. விஜய் என் மீது மதிப்பும், அன்பும் கொண்டவர், நானும் அதே மாதிரி தான். எனது மனைவி விஜயை தம்பியாக தான் கருதுகிறார்கள், அவரும் எனது மனைவியை அக்கா என்று தான் அன்பாக கூப்பிடுவார்.
அதனால் எந்த வகையில் அவரை விமர்சிக்கவோ, கட்சியை பற்றி விமர்சிக்கவோ, அவரது வேட்பாளர் பற்றி சொல்லவோ நான் தயாராக இல்லை. ஆனால் மதுரை மத்திய தொகுதியை பொறுத்தவரை போட்டி இரட்டை இலைக்கும், உதய சூரியனுக்கும் தான். அவர்களுக்கு நான் ஆதரித்து பிரசாரம் செய்து இருக்கிறேன். எனக்கு அவர்கள் ஆதரித்து பிரசாரம் செய்ய வருவார்கள். இவ்வாறு சுந்தர் சி கூறினார்.
