“உதயநிதி பேசலாம்”.. அடுத்த நிமிடமே முடிவை மாற்றிய சபாநாயகர் – அதிகாரி தந்த துண்டுச்சீட்டில் என்ன இருந்தது? – speaker jcd prabhakar changes decision on allowing lop to speak what was the reason behind it

தமிழக சட்டப்பேரவையில் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதால், எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை வழங்கினார்.

தனது பதிலுரையில் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கான காரணங்கள் குறித்து முதல்வர் விஜய் பேசினார். குறிப்பாக, போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் கவனம் செலுத்தினார்.

“125 பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்”

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய முதல்வர் விஜய், ‘சிங்கப்பெண்’அதிரடிப்படை நடவடிக்கைகள் மூலம் 125 பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு கடந்த கால திமுக ஆட்சியில் உருவான போதைப்பொருள் பழக்கமும் ஒரு காரணம் என முதல்வர் விஜய் குறிப்பிட்டார். போதைப்பொருள் பழக்கம் மரம் போல வேரூன்றி இருப்பதாகவும், அதன் ஒரு கிளையை மட்டுமே தனது ஆட்சி தற்போது வெட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்க்காரியா கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டிய விஜய்

தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், 1970ஆம் ஆண்டு வீராணம் ஏரி தொடர்பாக திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் விவகாரம் குறித்தும், சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்தும் பேசினார்.முதல்வர் விஜய் இந்த விவகாரங்களைப் பற்றி பேசியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பான சூழல் நிலவியது.

எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி மறுப்பு

பின்னர் முதல்வர் விஜய் தனது பதிலுரையை நிறைவு செய்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பேச சபாநாயகர் அனுமதி மறுத்தார். முதல்வர் விஜயின் உரையின்போது இடையூறு ஏற்பட்டதை காரணமாகக் குறிப்பிட்டு, எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி வழங்க முடியாது என சபாநாயகர் தெரிவித்தார்.

அவைக்காவலர்கள் மூலம் வெளியேற்ற உத்தரவு

இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அவையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. தர்ணாவில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

sofa model அரசு தமிழகத்தில் udhayanithi stalin கொடுத்த Reaction

முதல்வர் விஜய் சொன்ன பிறகு மாறிய முடிவு?

இதற்கிடையே, எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்க வேண்டும் என முதல்வர் விஜய் தெரிவித்தார். அதன்பின்னர், திமுக உறுப்பினர்களை பேச அனுமதிப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். ஆனால், பின்னர் திடீரென “திமுக உறுப்பினர்களைபேச அனுமதிக்க மாட்டேன்” என சபாநாயகர் தெரிவித்ததால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது.

மேலும் “LoP பேசட்டுமே” என்று அருகில் இருந்த அதிகாரிகள் தரப்பிலிருந்து சபாநாயகரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மைக் ஆஃப்-ல் இருப்பதாக நினைத்த சபாநாயகர், “வாய்ப்பு கொடுக்கப் போறதில்லை” என்று தெரிவித்துவிட்டார்.

சபாநாயகர் முடிவுக்கு பின்னால் என்ன?

சபாநாயகரின் இந்த முடிவு மாற்றம் தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, சபாநாயகரிடம் ஒரு துண்டுச் சீட்டு வழங்கப்பட்டதாகவும், அந்தச்சீட்டை யார்கொடுத்தது, அதன் பின்னணி என்ன, சபாநாயகர் தனது முடிவை மாற்றியதற்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.முதலில் திமுக உறுப்பினர்களை பேச அனுமதிக்க முடியாது எனக் கூறிய சபாநாயகர், பின்னர் அனுமதிப்பதாக கூறிவிட்டு மீண்டும் அனுமதி மறுத்தது ஏன் என்ற விவாதமும் சட்டப்பேரவை நிகழ்வுகளைத் தொடர்ந்து எழுந்துள்ளது.

Source link