சட்டமன்றத்தில் இன்றைய தினம் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறின. முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு பதிலளிக்க எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென திமுக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்களுக்கு சபாநாயகர் பேச வாய்ப்பளிக்கவில்லை. இந்நிலையில் நாதக இடும்பாவனம் கார்த்திக், இன்றைய தினம் முதல்வரின் பேச்சை குறித்து கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.
சட்டபேரவையில் இன்றைய தினம் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் ஜோசப் விஜய் பதிலுரை அளித்தார். கடந்த வெள்ளிக்கிழமை பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக கடுமையான கேள்விகளை எழுப்பியிருந்தார். இதனையடுத்து அவரின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் பேசினார். இந்நிலையில் அவருடைய பேச்சு முழுக்க முழுக்க திமுகவை விமர்சனம் செய்யும் விதமாகவே உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக நாதகவை சார்ந்த இடும்பாவனம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். தவெகவையும், முதல்வரையும் அட்டாக் செய்யும் விதமாக அவர் பகிர்ந்துள்ள இந்த பதிவினை முன்வைத்து விவாதங்கள் வெடித்துள்ளன. அதோடு அவரின் பதிவினை விமர்சனம் செய்யும் விதமாக தவெகவினர் ஏராளமான கமெண்ட்களை குவித்தது கொண்டிருக்கின்றனர்.
