சத்தம் போட்டு பேசினால் அனைத்தும் உண்மையாகி விடுமா? திமுகவுக்கு பயந்து சபாநாயகரே..!! எம்பி கனிமொழி கடும் தாக்கு..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரைக்கு, திமுக எம்பி கனிமொழி கண்டம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில், “வரலாறு பேச வேண்டுமென்றால் நீதிக்கட்சி காலத்திலிருந்தும், தமிழ்ச் சமூகத்துக்காக திமுக என்ன செய்தது என்பதிலிருந்தும் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என சாடியுள்ளார்.

கலைஞர் பற்றியும் திமுக பற்றியும் அவதூறாகப் பேசுவதையே சிலர் தங்களின் அரசியல் தகுதியாக நினைத்துக்கொண்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கும் என்றும் தனது பதிவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளிக்க வேண்டிய முதலமைச்சர், நேரடியாகப் பதில் சொல்லத் திராணியின்றி எழுதிக்கொடுத்த நீண்ட சொற்பொழிவை மட்டுமே படித்ததாகவும், திமுகவின் எதிர்வினைக்கு அஞ்சி சபாநாயகரே விவாதத்தை தவிர்த்துவிட்டதாகவும் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த மூன்று நாட்களாக ஒத்திகை பார்த்தும் கூட துறை சார்ந்த விவகாரங்களை முதலமைச்சர் குறைவாகவே பேசியதாகவும், காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும் வாட்ஸ்அப் பார்வர்டு பொய்களையும் கலந்து ஒரு பிரதியை முதலமைச்சரிடம் கொடுத்து படிக்க வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும், அதன் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தலைவர்…

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 7, 2026

சட்டம்-ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டிய சட்டமன்றத்தை ஆளுங்கட்சி சர்க்கஸ் கூடாரமாக மாற்றிவிட்டதாக தெரிவித்துள்ள கனிமொழி எம்பி, “அதிக சத்தத்துடன் பேசப்படும் அனைத்தும் உண்மையாகிவிடாது” (Not everything loud is true) என்று கூறியுள்ளார்.

ரோல்.. கேமரா.. ஆக்‌ஷன்..!! இதை படிக்கவா 3 நாள் டைம் கேட்டீங்க..? முதல்வர் விஜயை கடுமையாக விளாசிய உதயநிதி..!!

Source link