சென்னை: திமுகவையும், டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது என திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைக்கு 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்தை துவக்கினார். இன்று திருச்சியில் அவர் பிரசாரம் செய்தார். காலையில் டீக்கடை ஒன்றில் டீக்குடித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று துணை முதல்வரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தேநீர் கடை மற்றும் அரசு பஸ்சில் ஓட்டு சேகரித்தார்.
இதனை மேற்கோள் காட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுகவையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது. இதுதான் நாம் வளர்ந்த இடம். அரசியலையும், உலக நடப்புகளையும் அறிந்து கொண்ட இடம். டீக்கடைகள், சைக்கிள் கடைகள், முடி திருத்தகங்கள் இவை திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற கிளைக்கழகங்கள். இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
