கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு சம்பவம்: தமிழக சட்டசபையில் இன்று விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல்

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19 மற்றும் 20-ந்தேதிகளில் கள்ளச்சாராயம் குடித்ததால் பலர் உயிரிழந்தனர். சட்டவிரோத மாக மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் பலரும் உயிரிழக்க நேரிட்டதாக அப்போதய தி.மு.க. அரசு குற்றம்சாட்டி, பலர் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் விசாரணை மேற்கொண்டு அரசுக்கு இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கை இன்று தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசு இடம்பெறச் செய்துள்ளது.

இந்த அறிக்கை மூலம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்த முழு விசாரணை விவரங்களையும், அதை தடுப்பதற்கான பரிந்துரைகளையும் அறிந்துகொள்ள முடியும்.

Source link