எரிபொருள் நெருக்கடியில் ஆஸ்திரேலியா.. பயணங்களை ரத்து செய்த பிரதமர் – பொதுப் போக்குவரத்துக்கு மாற மக்களுக்கு வேண்டுகோள் | Iran war – Australia Faces Fuel Crisis: Prime Minister Cancels Travel — Appeals to Public to Switch to Public Transport

அல்பானீஸ் பொதுமக்களிடம் மூன்று வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.

அதில்,

“குடிமக்கள் தங்கள் சொந்த வாகனங்களிலிருந்து பொதுப் போக்குவரத்திற்கு மாறினால், அவர்களால் எரிபொருளைச் சேமிக்க முடியும்.

எண்ணெய் மற்றும் எரிவாயுவை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தாதீர்கள். அவ்வாறு செய்வது எதிர்காலத்தில் பிரச்சனையை மேலும் மோசமாக்கக்கூடும்.

பொருளாதாரம் சீராக இயங்குவதற்கு, விவசாயிகளுக்கும் சிறு வணிகங்களுக்கும் முன்னுரிமை அளிக்க முயலுங்கள். உணவு மற்றும் விதைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் நாம் உறுதி செய்ய வேண்டும்.

மார்ச் மாதம் முடிந்துவிட்டது, ஆனால் ஏப்ரல் மாதத்தில் பிரச்சனைகள் மோசமடையக்கூடும். ஹார்முஸ் நெருக்கடி எப்போது முடிவுக்கு வரும் என்பது யாருக்கும் தெரியாது.

ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமுடக்கத்தை விதிக்கப் போவதில்லை. பொருளாதாரத்தை சீராக இயங்க வைப்பதே எங்கள் நோக்கம்” என்று அல்பானீஸ் மேலும் கூறினார்.

Source link