வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயரை திருத்த வேண்டும் கோர்ட்டை நாடிய வேட்பாளர் நடிகை அஞ்சலி நாயர்! | Actress Anjali Nair approached court to rename her name in voting machine

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பூணித்துறை சட்டசபை தொகுதியில் பா.ஜ.க கூட்டணி கட்சியான டிவெண்டி 20 கட்சி வேட்பாளராக நடிகை அஞ்சலி நாயர் போட்டியிடுகிறார். 

இவருக்கு எதிராக சி.பி.எம் வேட்பாளராக கே.என்.உன்னிகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளராக தீபக் ஜோய் போன்றோர் களத்தில் உள்ளனர். கேரள பா.ஜ.க கூட்டணியில் உள்ள டிவெண்டி 20 கட்சி வேட்பாளர்கள் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

அஞ்சலி நாயருக்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் தெருக்களில் நடந்து சென்று “சக்க’ (பலாப்பழம்) சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அஞ்சலி நாயர் என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானாலும், அரசுப் பதிவுகளில் அஞ்சலி பி.வி என்றுதான் அவரது பெயர் உள்ளது.

அரசு ஆவணங்களின்படி வேட்புமனுத் தாக்கல் செய்ததால் அவரது பெயர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ‘அஞ்சலி பி.வி’ எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது பெயரை அஞ்சலி நாயர் எனப் பதிவுசெய்ய வேண்டும் என கொச்சியில் உள்ள ஐகோர்ட்டில் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அஞ்சலி நாயர் தெரிவித்துள்ளதாவது:

தேர்தல் மனுவில் அஞ்சலி பி.வி என்ற பெயரைப் பயன்படுத்தியிருந்தாலும், பொது வாழ்விலும் திரைத்துறையிலும் எனது பெயர் அஞ்சலி நாயர் என்று உள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போதும், போஸ்டர்கள் வெளியிட்டதிலும் அஞ்சலி நாயர் என்றே எனது பெயர் உள்ளது. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் அஞ்சலி பி.வி என்று இருப்பதால் ஓட்டுப்போட வரும் வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்.

Source link