துவங்கியது பிக் பாஸ் 10: முதல் நாளே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள், டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்டா இருக்கே!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் இன்று துவங்கியது. இன்று தமிழ் மட்டும் அல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியிருக்கிறது. அதனால் விஜய் சேதுபதி, மோகன்லால், நாகர்ஜுனா, கிச்சா சுதீப் ஆகியோர் வீடியோ மூலம் பேசினார்கள். அதன் பிறகு போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் விஜய் சேதுபதி

டிவி சீரியல்களில் நடித்து வரும் லட்சுமி ப்ரியா தான் முதல் போட்டியாளராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இரண்டாவது போட்டியாளராக சாதிகாவும், மூன்றாவது ஆளாவதாக ஷப்னமும் வந்தார்கள். போட்டியாளர்களை அறிவிக்கப்பட்டபோதிலும் அவர்களை உடனே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கவில்லை. முதல் மூன்று பேரில் எந்த இரண்டு பேரை உள்ளே அனுப்பி வைக்கலாம் என பார்வையாளர்கள் ஓட்டு போடுமாறு கூறினார் விஜய் சேதுபதி.

இதையடுத்து லட்சுமி ப்ரியா, சாதிகா, ஷ்பனம் ஆகியோர் தங்களை ஏன் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்க வேண்டும் என விவரித்தார்கள். இதையடுத்து வாக்குகளின் அடிப்படையில் லட்சுமி ப்ரியா தான் பிக் பாஸ் 10 வீட்டிற்குள் முதல் ஆளாக நுழைந்தார். 3 வயதில் இருந்து நடித்து வரும் சாதிகா அடுத்ததாக அந்த வீட்டிற்குள் செல்ல ஷப்னம் வெளியேற்றப்பட்டார்.

அதன் பிறகு விமர்சகரான பிரசாந்த், ஜெர்மனியில் படித்து வரும் சேலத்து பையன் பிரித்விநாத், மாடலிங் செய்து வரும் ஜாவித் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். அதில் பார்வையாளர்களின் வாக்குகள் பெற்று பிரித்விநாத், ஜாவித் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கும், பிரசாந்த் அவர் வீட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

பிரசாந்த் வெளியேற்றப்படுவார் என நினைக்கவில்லை என வியந்து கூறினார் விஜய் சேதுபதி. ஜாவிதை வைத்து லவ் டிராக் ஓடும் போலயே என்று ஏற்கனவே பேச்சு வந்துவிட்டது. பிரசாந்த் கிளம்பிய பிறகு காமன்மேன் ஆட்கள் 8 பேர் அழைக்கப்பட்டார்கள்.

அதில் யூடியூப் பிரபலம் முனியம்மாள், உதவி இயக்குநர் ஜேசன், ஷாமா ஆகியோரை பிக் பாஸ் 10 போட்டியாளர்களாக அறிவித்தார் விஜய் சேதுபதி. டிவி நிகழ்ச்சியில் வேலை பார்த்தபோது விஜய் சேதுபதி அணிந்த சட்டை தான் தனக்கு சம்பளமாக கிடைத்தது என்றார் ஜேசன்.

முனியம்மாள் கிடையாது அவருக்கு பதில் ஆஷா செல்வார் என்று கூறப்பட்டது. ஆனால் ஆஷா வெளியேற்றப்பட்டு முனியம்மாள் சென்றிருக்கிறார். கரிஷ்மாவுக்கு பதில் ஷாமா தேர்வாகியிருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வேன் என சத்தியம் செய்திருக்கிறார் முனியம்மாள்.

காமன்மேன் ஆட்களை அடுத்து முத்தழகி, கவிதா மோகன், அஷ்மிதா மேடைக்கு வந்தார்கள். அதில் யோகா குரு கவிதா மோகன் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரி, முத்துக்குமரன், லாஸ்லியா, தர்ஷன் ஏன் விஜய் சேதுபதி கூட அவரிடம் யோகா கற்க சென்றிருக்கிறார்.

பின்னர் டான்ஸர் அவினாஷ், அவரின் தங்கை அக்ஷிதா ஆகியோர் வந்தார்கள். அதில் அண்ணன் மட்டும் தேர்வு செய்யப்பட்டார். நடிகர் பிளாக் பாண்டி, வினோத் பாபு ஆகியோர் போட்டியாளர்களாக தேர்வாக புதுவை பையன் ரகுநாத் வெளியே அனுப்பி வைக்கப்பட்டார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

சாந்தினி தமிழரசன், தன்யா, ராகவ், குமரன், முகேஷ், அன்சர், சரண் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார்கள்.

Source link