நேற்றைய தினம் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தலுக்காக அதிமுக இப்போதே தயாராக ஆரம்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு இடங்களில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு நேற்றைய தினம் அறிவிப்பு வெளியானது. மீதமுள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு இடைக்கால தடை இருக்கும் நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இடங்களில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் விருப்பமனு அளிக்கலாம் என இபிஎஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
Source link
