ரோல்ஸ் ராயல்ஸ் காருக்கு வரி.. நாங்க காட்டட்டுமா? முதல்வரின் சட்டமன்ற பேச்சுக்கு திமுக பரந்தாமன் கடும் பதிலடி – dmk paranthamen hits back to the cm joseph vijay speech in the assembly

நேற்றைய தினம் சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பதிலுரையில் பேசியதற்கு திமுக சார்பாக கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சர்க்காரிய கமிஷன் , மிசா குறித்தெல்லாம் அவர் தெரிவித்த கருத்துகளுக்கு பேரவையிலே திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சட்டமன்றத்தில் அவர்கள் பேசுவதற்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிராபகர் அனுமதி மறுத்து விட்டார். இதனையடுத்து முதல்வரின் பேச்சு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன், முதல்வரின் விஜய்யின் பேச்சு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய 15 கேள்விகளுக்கு ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்க முடியாமல் தொடை நடுங்கி முதல்வர் ஓடி விட்டார். உங்களை நோக்கி ஒரு எதிர்க்கட்சி தலைவர் 15 கேள்வியை எழுப்பியுள்ளார்.

நீங்கள் பதில் அளிப்பதற்கு முந்தைய தினம் உங்கள் கட்சிக்காரரை சென்னை மாநகரில் வெட்டி படுகொலை செய்துள்ளனர். அதைப்பற்றி கூட தன்னிலை விளக்கம் அளிக்க முடியாத தொடை நடுங்கி முதலமைச்சர் அவர்கள், எதிர்க்கட்சி அணியில் முதல் வரிசை அமர்ந்திருக்கும் உறுப்பினர்கள் காவல் துறை மானிய கோரிக்கையில் யார் எழுப்பிய கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. நீங்களா ரெடி பண்ணி கொண்டு வந்திருக்கிற டையலாக்கை, சினிமாவில் உச்சபட்ச ஆக்ரோஷத்துடன் பேசுவதை போன்று ஒரு நடிப்பு நடிச்சுட்டு போய் இருக்கீங்க.

இதனால் யாருக்கு லாபம் என கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார் பரந்தாமன். அதோடு நீங்கள் என்ன மாற்றத்தை கொடுத்து இருக்கீங்கன்னா, சினிமாவில் நடிப்பதை தான் சட்டமன்றத்தில் நடிச்சு இருக்கீங்க. பெரிய அறிவு ஜீவி மாதிரி பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளை திமுகவினரை பார்த்து சொல்லி இருக்கிறார். ஒரு எஃப்ஆரை எடுத்து காண்பித்து போதுமா எனக்கேட்டால், என்ன போதுமா? எஃப்ஆரில் இருப்பது தான் பப்ளிக் டொமைன்ல இருக்கே.

நீதிமன்ற தீர்ப்பை எடுத்து காண்பித்து போதுமா என்று கேட்க, அப்படி ஏதாவது தீர்ப்பு வந்துருக்கா? அதுல ஒரு டையலாக் வேற சொல்றார். நானே காட்டு காட்டுன்னு காட்டுவேன்னு. என்னத்தை காட்ட போற. நீங்க மட்டும் டபுள் மீனிங், ட்ரிபிள் மீனிங்ல பேசலையா? எதை காட்ட போறீங்க. நீங்க ரோல்ஸ் ராயல்ஸ் காருக்கு வரி கட்டாததை பற்றி நீதிமன்றமே சொல்லி இருக்கே. அது தேச விரோதம் என்று சொல்லிருக்கே. நாங்க அதை எடுத்து காட்டட்டுமா? என கடுமையாக கேள்வியை முன்வைத்துள்ளார் பரந்தாமன்.

Source link