ஓஹோ, இதுக்கு தான் காமன்மேன் ஜேசன், முனியம்மாவ பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பியிருக்காங்களா?!

கத்தும் போட்டியாளர்கள்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் ஞாயிற்றுக்கிழமை மாலை துவங்கியது. இந்த சீசனின் முதல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் சாதிகா. 3 வயதில் இருந்தே நடித்து வந்தாலும் தனக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார் அவர். இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் வினோத் பாபு கேள்வி கேட்க ஆரம்பிக்க சாதிகா கடுப்பாகி இடத்தை காலி செய்தார்.

உயர்ந்த மனிதர் ஜேசன் பேச ஆரம்பிக்க, என்ன மரியாதை கொடுக்கிறீங்க என சாதிகா கேட்டார். யார் கேட்டாங்களோ அவங்களை போய் கேளுங்க என ஜேசன் கத்த, பதிலுக்கு சாதிகா கத்த, காது வலிக்கிறது கொஞ்சம் அமைதியாக இருங்களேன் என பார்வையாளர்கள் கதறுகிறார்கள். கத்தி கத்தி பேசினால் தான் பெரிய ஆள் என தவறாக நினைத்துக் கொண்டு இந்த சீசனிலும் கத்துகிறார்களே என ஏற்கனவே பார்வையாளர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜேசன் ட்ரிக்கர்: உதவி இயக்குநர் ஜேசன் தன் உயரத்தை சரியாக பயன்படுத்துகிறார். நல்லe ட்ரிக்கர் செய்து கத்த விடுகிறார். பிக் பாஸ் தி காமன்மேன் நிகழ்ச்சியில் இருந்து வந்த ஜேசன் மட்டும் அல்ல முனியம்மாவும் கலவரம் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். இதற்காக தான் அவர்களை காமன்மேனில் இருந்து பிக் பாஸ் 10 வீட்டிற்கு அனுப்பி வைத்திருப்பார்கள் போன்று. ஆரம்பமே சண்டையா?. சாதிகா கோபப்பட்டு கத்தியபோதே ஜேசன் தான் நினைத்ததை சாதித்துவிட்டார்.

இந்த சாதிகா பிக் பாஸ் வீட்டில் ரொம்ப நாட்கள் இருக்க மாட்டார் போன்று. பொண்ணு ஓவராக பேசுகிறார் என பிக் பாஸ் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சிலரோ ஜேசனை பார்த்தால் மறைந்த நடிகர் ரகுவரன் நினைவு வருவதாக கூறியிருக்கிறார்கள்.

மேடையில் எலிமினேஷன்: இது பத்தாவது சீசன் என்பதால் புதிது புதிதான விஷயங்களை செய்து பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் அப்படி செய்த ஒரு விஷயம் பார்வையாளர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது. அதாவது கிராண்டு லான்ச்சில் மூன்று மூன்று பேராக மேடைக்கு அழைத்து அரங்கில் இருந்தவர்களை வாக்களிக்கச் செய்து அதன் அடிப்படையில் இரண்டு பேரை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துவிட்டு ஒருவரை வெளியே அனுப்பினார்கள்.

வித்தியாசமாக செய்கிறேன் என இப்படி செய்தது நியாயம் இல்லை பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு தேர்வாகிவிட்டோம் என்கிற சந்தோஷத்தில் வந்தவர்களை கடைசி நேரத்தில் வெளியே போகச் சொல்லியிருப்பது சரியில்லை. இதை ஏற்க முடியாது என்கிறார்கள் பார்வையாளர்கள். இதற்கிடையே சிலரோ போரடிக்க ஆரம்பித்துவிட்டது பிக் பாஸ். அதனால் ஒயில்டு கார்டு மூலம் நல்ல போட்டியாளர்களாக நான்கு பேரை அனுப்பி வைக்கவும் என்கிறார்கள்.

பிக் பாஸ் வேன்:நிகழ்ச்சி துவங்கி இரண்டு நாள் கூட ஆகாத நிலையில் போரடிக்கிறது என்றால் அந்த பிக் பாஸும் என்ன தான் செய்வார் மக்களே?இதற்கிடையே பிக் பாஸ் கன்ஃபஷன் அறையில் அமர்ந்து பேசினால் எப்படி இருக்கும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

கன்ஃபஷன் அறை கொண்ட ஒரு வாகனம் உங்கள் ஊர் தேடி வருகிறது.அதில் இருக்கும் கன்ஃபஷன் அறையில் அமர்ந்து பிக் பாஸிடம் மனம் திறந்து பேசலாம்.

Source link