சிவகங்கை: தோல்வி பயத்தால் காங்கிரஸ் காலை பிடித்து கெஞ்சி கூத்தாடி, ஸ்டாலின் கூட்டணி வைத்துள்ளார் என அதிமுக

சிவகங்கை: தோல்வி பயத்தால் காங்கிரஸ் காலை பிடித்து கெஞ்சி கூத்தாடி, ஸ்டாலின் கூட்டணி வைத்துள்ளார் என அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.

சிவகங்கையில் பிரசாரம் செய்த இபிஎஸ் பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி சங்கியாக மாறிவிட்டார் என்கிறார் ஸ்டாலின். அவதூறு கருத்தை சொல்கிறார். தோல்வி பயத்தால் காங்கிரஸ் காலை பிடித்து கெஞ்சி கூத்தாடி கூட்டணி வைத்திருக்கிறீர்கள். உங்க அப்பா கருணாநிதி சங்கி என்று ஒப்புக்கொள்கிறாரா? கருணாநிதி யாரோடு இருக்கிறார்? (போட்டோ காண்பிக்கிறார்) வாஜ்பாயோடு இருக்கார். ண்மையில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் பிரச்னை. கனிமொழி டில்லிக்கு சென்று பார்த்தார். அப்படி என்றால் ஸ்டாலின் சகோதரி கனிமொழி சங்கியா? உங்கள் பதவிக்கு தக்கவாறு பேசி பழகுகுங்கள் எங்கள் தொண்டன் பேசத் தொடங்கினால் செவி கிழிந்துவிடும்.

இபிஎஸ் கையில் ரத்தக்கறை படிந்திருக்கிறதாம், புதிதாகக் கண்டுபிடித்திருக்கார், என் கை சுத்தமாக இருக்கு பாருங்கள். கோவில் காவலாளி அஜித்குமார் மீது பொய் வழக்கு போட்டு விசாரணை என்ற பெயரில் படுகொலை செய்துள்ளனர். இதுதான் ரத்தக்கறை படிந்த கை. மானாமதுரையில் லாக்கப் டெத், இதுதான் ரத்தக்கறை படிந்த கை. ஸ்டாலின் திட்டமிட்டு அதிமுகவை பற்றி அவதூறு பேசுகிறார். தினமும் போட்டோ ஷூட் நடத்துவார் ஸ்டாலின், இதுதான் நடக்கிறது. வேறு எந்த சாதனையும் இல்லை. திட்டத்துக்கு பேர் வைப்பதில் நோபல் பரிசு கொடுக்கலாம். 52 குழு அமைத்து, தலைவர் போட்டாச்சு. ஆனால், எதுவும் செயல்படவில்லை.

நம்மைப்போல ஏழ்மையில் வாழ்ந்தால்தான் பணத்தின் அருமை தெரியும். அவர்கள் ஊதாரித்தனமாக செலவழிக்கிறார்கள். பிரச்னையை தீர்ப்பதற்கு செலவு பண்ணுங்கள். புதிய அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். நாம் அவர் அறிக்கையை பார்த்து காப்பி அடித்தோம் என்கிறார். 2021ல் முதலில் அதிமுக தான் தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அரை மணிநேரம் கழித்துதான் திமுக தேர்தல் அறிக்கை வந்தது. அப்போதே எல்லா மகளிர்க்கும் 1500 என்று அறிவித்தோம், அவர்கள் 1000 என்று சொன்னார்கள். நாங்கள் காப்பியடிக்கவில்லை, நம் அறிக்கையைப் பார்த்து திமுகதான் காப்பியடித்தது. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

இபிஎஸ் வாகனத்தில் சோதனை

சிவகங்கையில் பிரசாரத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் இபிஎஸ் பிரசார வாகனத்தை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர்

Source link