துபாய்: ஐ.சி.சி., ‘டி-20’ பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா முதலிடத்தில் நீடிக்கிறார்.
சர்வதேச ‘டி-20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா (875 புள்ளி), இஷான் கிஷான் (871) முதலிரண்டு இடங்களை தக்கவைத்துக் கொண்டனர். மற்ற இந்திய வீரர்களான திலக் வர்மா (742 புள்ளி, 6வது இடம்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (722 புள்ளி, 7வது இடம்), ‘டாப்-10’ பட்டியலில் நீடிக்கின்றனர்.
பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி (740 புள்ளி), ஜஸ்பிரித் பும்ரா (702) முறையே 2, 5வது இடத்தில் தொடர்கின்றனர். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (753) முதலிடத்தில் உள்ளார்.
‘ஆல்-ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (299) ‘நம்பர்-2’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஜா (328) முதலிடத்தில் நீடிக்கிறார்.
