அப்போது பேசிய நீதிபதி நரேஷ் குமார் சந்திரவன்ஷி, “ஒருவர் வசிக்கும் வீட்டில் பிரார்த்தனை நடத்துவதைத் தடைசெய்யும் சட்டம் எதுவும் இல்லை.
மேலும், சட்டத்தை மீறாமல் நடத்தப்படும் பிரார்த்தனைகள் அல்லது பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு எந்தவொரு அதிகாரியிடமிருந்தும் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
அங்கு ஏதேனும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டால், உரிய சட்டங்களின் கீழ் அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
எனவே, மனுதாரர்களின் குடிமை உரிமைகளில் தலையிட வேண்டாம் என்றும், விசாரணை என்ற போர்வையில் அவர்களைத் துன்புறுத்த வேண்டாம் என்றும் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
