புதுடில்லி: சந்தேகத்திற்கிடமாக உரங்களை திருப்பி விடுதல், கள்ளச்சந்தையில் உரங்கள் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
குறைந்த உரத்தேவை உள்ள காலங்களில் வழக்கத்துக்கு மாறாக அதிக விற்பனையை பதிவு செய்யும் உர நிறுவனங்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உர அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உர தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசின் சுற்றறிக்கை வாட்ஸாப்பில் வந்துள்ளது. உர விற்பனையில் குற்றங்கள் பதிவானால் பதிவு நீக்கப்படும் எனவும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தற்போது மக்காச்சோள விதைப்பு துவங்கியுள்ளதால் உரத்தேவை அதிகமாகியுள்ளது.
இதனால் விவசாயிகள் முன்கூட்டியே உரங்களை வாங்குகின்றனர். மேற்காசிய போரால் யூரியா தயாரிப்புக்கான எல்.என்.ஜி., தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உர தயாரிப்பு தடைபட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துஉள்ளனர்.
இதற்கிடையே, பார்லி.,யில் மத்திய இணையமைச்சர் அனுபிரியா பட்டேல் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், “நாட்டில் உரத்தட்டுப்பாடு இல்லை. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 மற்றும் உர கட்டுப்பாட்டு ஆணை 1985ன்படி உரம் தொடர்பான முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
“தொடர்ந்து கள்ள சந்தையில் உர விற்பனையை தடுக்க அரசு கண்காணித்து வருகிறது,” என்றார்.
