ஆசிய குத்துச்சண்டை: காலிறுதியில் சச்சின்

உலான்பாடர்: ஆசிய குத்துச்சண்டை காலிறுதிக்கு இந்தியாவின் சச்சின், விஷ்வநாத் முன்னேறினர்.

மங்கோலியாவில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் சச்சின் சிவாச், மங்கோலியாவின் பயார்கு மோதினர். இதில் சச்சின் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இதில் சீனதைபேயின் செங்-வெய் லீயை சந்திக்கிறார்.

ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் விஷ்வநாத் சுரேஷ், கிர்கிஸ்தானின் பெக்சாத் எர்கேஷோவ் மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய விஷ்வநாத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் ‘நடப்பு உலக சாம்பியன்’ கஜகஸ்தானின் சஞ்சார் டாஷ்கென்பாயை சந்திக்கிறார்.

Source link