புதுடில்லி: ஐ.டி.சி., நிறுவனம், ஆரோக்கிய உணவு பிராண்டான யோகா பாரின் தாய் நிறுவனமான ஸ்ப்ரூட்லைப் புட்ஸை இன்று முதல் தனது அதிகாரப்பூர்வ துணை நிறுவனமாக மாற்றுகிறது.
கடந்த 2023 ஒப்பந்தத்தின் கீழ், ஸ்ப்ரூட்லைப் நிறுவன இயக்குநர் குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களை நியமிக்கும் உரிமையை ஐ.டி.சி., இன்று பெறுகிறது.
ஏற்கனவே, பிஸ்கட் உள்ளிட்ட ஏராளமான உணவுப்பொருட்களை ஐ.டி.சி., தயாரித்து விற் பனை செய்து வரு கிறது. துணை நிறுவனமாக யோகா பாரும் இணைவது, அதன் சந்தைப்பங்கை வலிமைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
