“எதே தமிழக வெற்றிக் கழகமா? திண்டுக்கல் சீனிவாசன் பதிலால் உருவான சிரிப்பலை – ரிப்போர்ட்டர் கேள்வியால் குழம்பிய அதிமுகவினர் – you mean tamilaga vettri kazhagam dindigul sreenivasan response on tvk sparks laughter after reporters question

தமிழக அரசியல் களம் இடைத்தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணம் குறித்த எதிர்பார்ப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடிகர் விஜய் தலைமையிலான தவெக, வரும் தேர்தலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது.

இந்த நிலையில், தவெகவின் வெற்றி வாய்ப்பு குறித்து அதிமுக மூத்த உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?”

தவெகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, திண்டுக்கல் சீனிவாசன் அதற்கு சுருக்கமாக “நல்லா இருக்கு” என பதிலளித்தார்.

அவரது இந்த பதில் அடுத்த கேள்விக்கு வழிவகுத்தது. அவர் எந்த கட்சியை குறிப்பிட்டு பேசுகிறார் என்பதை தெளிவுபடுத்தும் வகையில், செய்தியாளர் மீண்டும் “தமிழக வெற்றிக் கழகம்?” என கேட்டார்.

“எதே தமிழக வெற்றிக் கழகமா?”

இதைக் கேட்ட திண்டுக்கல் சீனிவாசன், “எதே தமிழக வெற்றிக் கழகமா? அதையா கேட்ட?” என ஆச்சரியத்துடன் பதிலளித்தார். இதனால் அங்கு சிரிப்பலை உருவானது.

சில நொடிகளில் நடந்த இந்த கேள்வி–பதில் தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. தவெகவின் தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு முதலில் “நல்லா இருக்கு” என பதிலளித்த அவர், அது தவெக குறித்த கேள்வி என்பதை அறிந்ததும் வெளிப்படுத்திய எதிர்வினை பேசுபொருளாகியுள்ளது.

விஜய்யின் தவெகவை எதிர்கொள்ளும் வகையில் அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பதில் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.

Source link