CSK – ஓபனர் இடத்திற்கு புது வீரரை வாங்க, 25 கோடி வரை ஒதுக்கும் சிஎஸ்கே? நல்ல முடிவுதான் – chennai super kings will spend 25 crore for opener player in ipl 2027 mini auction

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ஓபனர் இடத்திற்கு தரமான வீரரை வாங்க முடிவு செய்துள்ளது. காரணம், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர்தான்.

என்ன காரணம்? ஐபிஎல் 2026 சீசனில், டிரேடிங் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த சஞ்சு சாம்சன், ஐபிஎல் 2027 சீசனில் தனக்குதான் கேப்டன் பதவியை தர வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார். மறுபக்கம், கடந்த சீசனில் வெறும் 123 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி சொதப்பிய ருதுராஜ் கெய்க்வாட்டும், கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என பிடிவாதமாக இருக்கிறார்.

இதுதான், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று சீசன்களாக, சிஎஸ்கேவால் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. இதனால், அணியை எப்படி பலப்படுத்துவது என்பது குறித்து, சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வரும் நிலையில், தற்போதே கேப்டன்ஸி பிரச்சினையை இருவரும் எழுப்பியுள்ளதால், இருவரையும் ஓரங்கட்ட சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதாவது, ஐபிஎல் 2028 சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன், ருதுராஜ், சாம்சன் இரண்டு வீரர்களையும் வெளியேற்ற முடிவு செய்துள்ளனர். மேலும், 30 வயதுக்கு குறைவான வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். கேப்டன் பதவியை ஆயுஷ் மாத்ரேவுக்கு கொடுத்து, டிவோல்ட் பிரேவிஸ், கார்த்திக் சர்மா, நேதன் எல்லிஸ் போன்றவர்களை சுற்றி, அணியை கட்டமைக்க முடிவு செய்துள்ளனர்.

புது ஓபனர்: ஒரு வெளிநாட்டு வீரருக்கு ஓபனர் இடத்தை கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலத்தில் பங்கேற்க உள்ள ஹேரி ப்ரூக்கை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற முடிவை சிஎஸ்கே எடுத்துள்ளதாம். அதற்காக, பிரசாந்த் வீர் போன்ற பெரிய தொகை வீரர்களை வெளியேற்றி, ப்ரூக்கை வாங்க 25 கோடியை ஒதுக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சொதப்பல் இருக்க கூடாது: கடந்த மூன்று சீசன்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக சொதப்ப முக்கிய காரணமே, ஏலத்தில் சரியான வீரரை வாங்க முடியாததுதான். பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா ஆகியோரை தலா 14.20 கோடிக்கு வாங்கினார்கள். அதேநேரத்தில், கே.எல்.ராகுல் 14 கோடிக்கே கிடைத்தார். இப்படி, மோசமாக செயல்பட்டு, தரமான வீரர்களை வாங்காததுதான், சொதப்பலுக்கு காரணம் என்பதால், ஐபிஎல் 2027 சீசனுக்கான ஏலத்திற்கு சரியான திட்டத்தோடு செல்ல சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.

அதாவது, ஒரு வீரரை வாங்க முடிவு செய்துவிட்டால், அவருக்கான தொகையை ஒதுக்கி, திட்டமிட்டபடி அந்த வீரரை வாங்க முடிவு செய்துள்ளனர். அப்படிதான், ஹேரி ப்ரூக்கை வாங்க 25 கோடி வரை ஒதுக்கியுள்ளனர்.

மேலும், புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியிலும் சிஎஸ்கே தீவிரம் காட்டி வருகிறது. புது தலைமை பயிற்சியாளராக இந்தியரை தேர்வு செய்வதா, வெளிநாட்டு முன்னாள் வீரரை தேர்வு செய்வதா எந்த குழப்பத்தில் சிஎஸ்கே நிர்வாகம் உள்ளது. இந்தியரை தேர்வு செய்தால், சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்யவே அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.

Source link