பீஜிங்: சீனாவில், டிரைவர் இல்லாத, ‘ரோபோ டாக்சி’ சேவையை வழங்கும், ‘அப்போலோ கோ’ நிறுவனத்தின் கார்கள் ஒரே நேரத்தில் திடீரென நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நம் அண்டை நாடான சீனாவில், ‘பைடு’ நிறுவனம் வூகான் மாகாணத்தில் நுாற்றுக்கணக்கான ரோபோ டாக்சிகளை இயக்கி வருகிறது. இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, ‘அப்போலா கோ’ என்ற நிறுவனமும், ரோபோ டாக்சி சேவையை வழங்கி வருகிறது.
இந் நிறுவனத்தின் டிரைவர் இல்லாத ரோபோ டாக்சி சேவை நேற்று முன்தினம் இரவு திடீரென செயலிழந்தன. சாலையில் ஓடிக்கொண்டிருந்த, 100க்கும் மேற்பட்ட கார்கள் ஆங்காங்கே நின்றன.
இதனால் பயணியர் அவதியடைந்தனர். அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
