விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 14ஆம் தேதி திங்கட்கிழமை அன்று நாடும் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த புனிதமான காக்கும் கடவுள் கணேசனின் அவதார தினம் உருவாகக்கூடிய அற்புத யோகங்கள், சில ராசிகளின் வாழ்க்கையில் நேர்மறையான திருப்பங்களையும், அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் தரக்கூடியதாக அமைய உள்ளது. விக்ன விநாயகரின் அருளால், எந்தெந்த ராசிகளின் வாழ்வில் செல்வம், வெற்றி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்போகிறது? அந்த 5 அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
முழு முதற்கடவுள் விநாயகர் பெருமான் அவதரித்த தினத்தை நாம் விநாயகர் சதுர்த்தி என கொண்டாடி வருகின்றோம். இந்த ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது இந்த அற்புத நாளில் நிலவக்கூடிய கிரகங்களின் அமைப்பாளர் பிரம்மயோகம் மற்றும் லட்சுமி புஷ்கரயோகம் போன்ற நல்ல மங்களகரமானங்கள் உருவாகின்றன. இந்த யோக த்தின் அமைப்பின் காரணமாக சிலர் ராசிகளின் வாழ்க்கையில் நேர்மறையான நல்ல மாற்றங்களை காண்பார்கள். இந்த யோக அமைப்பு எந்தெந்த ராசிகளுக்கு அற்புத பலன்களை தருமென தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
மேஷ ராசி சேர்ந்த நண்பர்களுக்கு இந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் இருக்கக்கூடிய யோகங்கள் காரணமாக ஒரு புதிய தொடக்கமாக அமைய உள்ளது. நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பணிகளை நிறைவேற்றுவதற்காக நல்ல வாய்ப்புகளை வழங்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் அல்லது நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். தொழில் செய்யக்கூடிய அன்பர்களுக்கு சூழல் சாதகமாக அமைவது உதவும், லாபகரமானதாகவும் அமையும். உங்களுடைய குடும்பத்தினரிடமிருந்து நல்ல செய்திகளையும், ஆதரவையும் பெறுவீர்கள். விநாயகரின் அருள் நீங்கள் எடுக்கக் கூடிய துணிச்சலான முடிவுகள் எதிர்காலத்தில் நல்ல பலன் தரக்கூடியதாக இருக்கும்.
கன்னி ராசி
கன்னி ராசி அன்பர்களுக்கு விநாயகர் சதுர்த்தி திருநாளில் வாழக்கூடிய சுப யோகங்கள் உங்களுடைய தொழில் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களை நல்ல பலனை தரக்கூடியதாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய கடின உழைப்பிற்கானான அங்கீகாரம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். தொழில் தொடர்பான முயற்சிகள் உங்களுக்கு நன்மைகளை தரலாம். வனப்பழக்கம் அதிகரிப்பதோடு, அதை சேமிப்பதற்கான நல்ல வாய்ப்புகளும் அமையும். உங்களுடைய திறமை மற்றும் கடின உழைப்பதற்கான உரிய பலன்களை பெறுகிறீர்கள்.
துலாம் ராசி
துலாம் ராசி அன்பர்களுக்கு உங்களுடைய நம்பிக்கையை வைக்கக் கூடியதாக இருக்கும். அன்பின் வியாபாரம், தொழில் தொடர்பாக புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். இதில் படிப்படியாக முன்னேற்றம் அடையும். உத்தியோகம் செய்யக்கூடியவர்களுக்கு பணியிடத்தில் மேலதிகாரிகள் நடத்தும் முக்கிய நபர்களால் பாராட்டு கிடைக்கும்.குடும்பத்தினரின் ஒத்துழைப்பு உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தடைகளை தவிர்த்து உங்களுடைய வாழ்க்கையில் வெற்றி என்பது அத்தியாயத்தை தொடங்க முடியும்.
தனுசு ராசி
தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த விநாயகர் சதுர்த்தி சுபநாளில் உருவாகக்கூடிய யோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவை திறக்கும். நீண்ட நாட்கள் எதிர்பார்க்கக் கூடிய புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செய்யக்கூடிய தொழில், வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் லாபத்தை தரும். நிதி நெருக்கடிகள் விலகும். மேலும் புதிய வலிகளில் வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு நம்பிக்கையை தரும்.
மகர ராசி
மகர ராசி சேர்ந்த நண்பர்களுக்கு இந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் அவருடைய நல்ல அருள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த பணிகள் மீண்டும் வேகம் எடுக்கும். தொழில் மற்றும் வேலை தொடர்பாக புதிய வாய்ப்புகள் எதிர்பார்க்கலாம். நிதி நிலைமையும் முன்னேற்றத்தை தரும். நீங்கள் எதிர்பாராத வழிகளில் லாபத்தை பெறுவீர்கள். இதன் மூலம் உங்களுடைய குடும்பத்தின் பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும். பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் நீங்கள் தொடங்கக்கூடிய புதிய பணிகள் நல்ல வெற்றியை தரும். மேலும் நீண்ட காலமாக இருக்கக்கூடிய தடைகள் நீங்கும். வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
